உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி

roheengya

ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்துள்ள மனிதாபிமான நெருக்கடி காரணமாக ரொஹிங்கிய கிளர்ச்சியாளர் குளுவான அர்சா எனப்படும் அராகான் ரொஹிங்கியர் பாதுகாப்பு இராணுவம் என்ற அமைப்பு ஒரு மாதகால ஒரு தலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உடன்பாடு இன்று அமுலுக்கு வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மியன்மார் இராணுவமும் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அர்சா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அர்சா அமைப்பு மியன்மார் பாதுகாப்பு தரப்பினர் மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து மியன்மாரின் ரக்கின் பிராந்தியத்தில் இராணுவத்தினரால் ரொஹிங்கிய பொது மக்கள் மீது தொடர்ச்சியாக இன ரீதியான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது.

இதனால் 400 வரையான ரொஹிங்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதினமானவர்கள் அகதிகளாக பங்களாதேஷிற்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு நிவாரண்களை பெற்றுக்கொடுக்க நிவாரணக் குழுக்களுக்கு 77 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரொஹிங்கிய குடியுரிமை,

கல்வி மற்றும் தொழில்சார் அங்கிகாரம் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 1978 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அவர்கள் மீது மனிதாபிமானமற்ற வன்முறைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-athirvu.com

ரோஹிஞ்சா தீவிரவாதிகளின் போர் நிறுத்தத்தை ஏற்க மியான்மர் அரசு மறுப்பு

ரகைன் மாகாணத்தில்,ரோஹிஞ்சா தீவிரவாதிகள் அறிவித்த ஒருதலைப்பட்ச ஒரு மாத கால போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மியான்மர் அரசு மறுத்துள்ளது.

அரகன் ரோஹிஞ்சா சால்வேஷன் ராணுவம் (அர்சா) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ரோஹிஞ்சா தீவிரவாதிகள், போர் நிறுத்தத்தை அறிவித்ததுடன் மியான்மர் ராணுவமும் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டுமென்று என்றும் வலியுறுத்தினர்.

மியான்மர் அரசு ‘பயங்கரவாதிகளுடன்’ பேச்சுவார்த்தை நடத்தாது என அரசு செய்தி தொடர்பாளர் ஜாவ் ஹாட்டே கூறியுள்ளார்.

கடந்த மாதம் ரகைன் மாகாணத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து கிட்டதட்ட 294,000 ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்திற்கு தப்பி சென்றுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி போலீஸ் சாவடிகள் மீது தாக்குதல் நடத்திய அர்சா, 12 பேரை கொன்றது. இச்சம்பவம் பாதுகாப்புப் படைகளிடமிருந்து ஒரு எதிர் தாக்குதலை தூண்டியது.

மியான்மரில் வசிக்கும் நாடற்ற சிறுபான்மை இஸ்லாமிய ரோஹிஞ்சாக்கள், ரகைன் மாகாண பெளத்தர்கள் தங்கள் மீது வன்முறையை ஏவுவதாகவும், கிராமங்களை கொளுத்துவதாகவும் கூறுகிறார்கள்.

மியான்மர் அரசு இதனை மறுத்துள்ளது. தாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது.

இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை டிவிட்டரில் அறிவித்த அர்சா, மனிதாபமான அமைப்புகள் தங்கள் உதவிப் பணிகளை வழங்கவே இதனை அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து ஞாயிறன்று டிவிட்டரில் கருத்து தெரிவித்த அரசு செய்தி தொடர்பாளர் ஜாவ் ஹாட்டே,” பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கொள்கை எங்களுக்கு இல்லை”என கூறியுள்ளார். -BBC_Tamil