‘மலேசியாவைச் சீனா ஆளவில்லை’, மசீச தலைவர் கூறுகிறார்

Liow-Tiong-Lai-chinaஇன்று, போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டு முதலீட்டையே மலேசியா அதிகம் நம்பியிருக்கிறது என்று குறைகூறும் சில தரப்பினரைச் சாடினார்.

வெளிநாட்டு முதலீடுகள் மூலம், சீனா மலேசியாவை ஆக்கிரமிக்கவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் காரணங்களுக்கானவை மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமீப காலமாக, சீனாவின் முதலீடுகள் அதிகரித்து வந்தாலும், அவை நம் நாட்டின் வெளிநாட்டு முதலீடுகளில் மிகப்பெரியது அல்ல என்று லியோ மேலும் விளக்கப்படுத்தினார்.

“மலேசிய முதலீடுகளில், சீனா முதல் இடத்தில் இல்லை. அது மற்ற நாடுகளின் பின்னாலேயே இருக்கிறது. நம்மிடம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் முதலீடுகளும் இருக்கின்றன,” என்றார் அவர்.

“ஒருசிலர், சீனா தன் முதலீடுகளால் மலேசியாவை ஆக்கிரமித்து வருகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர், ஆனால், அது உண்மை அல்ல. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் இவ்வாறு குறை பேசி வருகின்றனர்,” என்று மசீச தேசியத் தலைவருமான லியோ, இன்று நிருபர்களிடம் பேசினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • RAHIM A.S.S. wrote on 13 September, 2017, 10:53

  இன்று மலேசியாவை சீனா ஆளவில்லை என்பார்
  நாளை சீனாதான் மலேசியாவை ஆளுகிறது என்பார்
  இதற்கும் கைதட்டி வரவேற்க ஒரு ஆட்டு மந்தை கூட்டம் மசீசவிலும் இருப்பதை நன்கு அறிந்துள்ளதால்தான் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார் மசீச தலைவர் லியோ தியோங் லாய்.

 • தேனீ wrote on 13 September, 2017, 13:32

  சீனா ஆளவில்லை. சீனர்கள் ஆளுகின்றனர். வார்த்தையைச் திருத்திச்
  சொன்னால் மலேசியர் புரிந்து கொள்வார்.

 • seliyan wrote on 13 September, 2017, 20:06

  ஆளக்கூடிய காலம் வெகு தூரமில்லை. உங்கள் அறிவுப்பு உணர்த்துகிறது. உங்கள் கூட்டணி பங்காளிகள் அறிவுப்பு அதற்கு சான்று.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)