காஷ்மீர் விவகாரம் நேருவின் தவறால் விளைந்தது – அமைச்சர் ஜிதேந்திரா சிங்

Kashmir-Mapபுதுடெல்லி, ”வேறு எந்த மாநிலத்திலும் காஷ்மீர் விவகாரம் போல விவகாரங்கள் இல்லை. காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தம் மூலம் இணைந்ததது; இது பிற சிற்றரசுகள் எப்படி இணைந்தனவோ அதைப்போலவேதான் இருந்தது. நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்ற தவறில் துவங்கி பல தவறுகள் தொடர்ந்து நடந்துள்ளன. நேரு பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவின்படி இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ காஷ்மீர் இணையலாம் என்றதையே அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆர் எஸ் எஸ் பிரமுகர் இந்த்ரேஷ் குமார் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் பேசும்போது இவ்வாறு கூறினார்.

காஷ்மீரில் தீவிரவாதத்தை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார் அமைச்சர். இந்தியப் பிரிவினையே மிகப்பெரிய தவறு என்பதை பல அறிஞர்கள், அவர்களில் பலர் முஸ்லிம்கள், எதிர்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவான 370 திரும்பப் பெறப்பட வேண்டும் என்றார். மத்திய அமைச்சரவையின் தீர்மானம் ஒன்றின் மூலம் தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவை திரும்பப் பெற முடியும் என்றார் சுவாமி.

-dailythanthi.com

TAGS: