தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

thileepan-2017-1இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின், 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.

இராசையா பார்த்திபன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், 15ஆம் நாள் நல்லூர் கந்தன் ஆலய வடக்கு வீதியில், 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து, செப்ரெபம்ர் 26ஆம் நாள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தியாகதீபம் திலீபனின், உண்ணா நோன்பு ஆரம்பித்த 30 ஆவது ஆண்டு நிறைவு நாளான நேற்று, நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு தென்மேற்குப் பகுதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் நேற்றுக்காலை 10 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.

திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி , அவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும், மாணவர்களால் தியாகதீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் திலீபன் உருவப்படம் வைக்கப்பட்டு, தனித்துவமான வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: