நஜிப் என்ன அ்றிவிக்கப் போகிறார்? பல ஊகங்கள்

najibஇன்று  அம்னோ   தலைமையகத்தில்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   செய்தியாளர்  கூட்டம்  ஒன்று   நடக்கும்  என்று   அறிவி்க்கப்பட்டுள்ளது.  ஏன்  இந்தத்  திடீர்   செய்தியாளர்   கூட்டம்?   பிரதமர்   அதில்  என்ன   அறிவிக்கப்   போகிறார்?  இப்படிப்  பல  கேள்விகள்.  கேள்விகளுக்குப்   பதிலாக   பல   ஊகங்கள்.

சிலர்  நஜிப்  நாடாளுமன்றம்   கலைக்கப்படுவது   பற்றி   அதில்   அறிவிப்பார்   என்று  சொல்கிறார்கள்.  அப்படிச்  செய்வது   வழக்கத்துக்கு  மாறானது   என்பதால்  அதற்கு  வாய்ப்பில்லை.

12வது  13வது   பொதுத்   தேர்தல்கள்   பிரதமர்  துறையில்,   அமைச்சர்கள்  முன்னிலையில்தான்  அறிவிக்கப்பட்டன.

இன்றைய   செய்தியாளர்  கூட்டமோ  அம்னோ   தலைமையகத்தில்   நடைபெறுகிறது.

இந்தக்  கூட்டத்துக்குச்   சரவாக்   பிஎன்  தலைவர்கள்   அழைக்கப்படவில்லை. சரவாக்கில்  மட்டும்தான்   அம்னோ  இல்லை   என்பது   குறிப்பிடத்தக்கது.

சரவாக்   பிஎன்  தலைவர்கள்   இல்லை   என்பதால்  இது  ஏதோ   அம்னோ   விவகாரமாக  இருக்கலாம்போல்    தெரிகிறது.

பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா   தலைவர்கள்  அனினா  சாஆடுடின்,   ஹமிடா  ஒஸ்மான்   ஆகியோர்   நேற்று   அக்கட்சியிலிருந்து   வெளியேறியுள்ளதால்   அவர்கள்  மீண்டும்   அம்னோவில்    சேர்வது   பற்றி   அறிவிக்கப்படலாம்   என்பது   இன்னொரு   ஊகம்.

ஆனால்,  தொடர்புகொண்டு   விசாரித்தபோது  அனினாவும்   ஹமிடாவும்   அதை  மறுத்தார்கள்.

இன்றைய   செய்தியாளர்   கூட்டம்  மாலை  மணி   4.45க்கு   நடைபெறுகிறது. அனைத்து   அம்னோ  உச்சமன்ற   உறுப்பினர்களும்   மந்திரி  புசார்களும்  முதலமைச்சர்களும்   அதற்கு   அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறப்புச்   செய்தியாளர்  கூட்டத்தில்  கலந்துகொள்வதற்காக   துணைப்  பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடியும்   பெர்லிசுக்கான  அலுவல்  பயணத்தைச்   சுருக்கிக்கொண்டு  திரும்பி   வருகிறார்.