ஜிஎஸ்டி சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரப்படும்

gst2014   பொருள்,  சேவைச்  சட்ட(ஜிஎஸ்டி)த்தில்   விரைவில்   திருத்தம்  கொண்டுவரப்படவுள்ளது.  இத்திருத்தம்,  மலேசியாவில்   இலக்கவியல்   பொருளாதார  நடவடிக்கைகளை  மேற்கொள்ளும்   வெளிநாட்டு   நிறுவனங்களிடமிருந்து     பில்லியன்  கணக்கான   ரிங்கிட்  அரசாங்கத்துக்கு  வரியாகக்   கிடைப்பதற்கு    வழிவகுக்கும்.

திருத்தம்   செய்வதற்கான   பரிந்துரை   அடுத்த   மாதம்   நாடாளுமன்றம்  கூடும்போது  தாக்கல்   செய்யப்படும்   எனச்  சுங்கத்துறை    தலைமை   இயக்குனர்   சுப்பிரமணியம்  துளசி    கூறினார்.

“இலக்கவியல்   பொருளாதாரத்தில்  வணிகர்- பயனீட்டாளர்  நேரடி   பரிவர்த்தனையில்தான்  மிகப்  பெரிய  இழப்பு   ஏற்படுகிறது.  வர்த்தகம்  செய்யும்   நிறுவனம்   வெளிநாட்டிலிருந்து   செயல்படுகிறது.  பொருள்களை   நேரடியாக   பயனீட்டாளருக்கு   அனுப்பி  வைக்கிறது.  அவர்களுக்கு   அதற்கான  பணமும்  உடண்டியாகக்  கிடைத்து   விடலாம்.  ஆனால்,  அச்சேவைக்கு  வரி  விதிக்கப்படுவதில்லை.

“அதேவேளை  உள்நாட்டில்   அதே  பொருளை  விற்போருக்கு    வரி  விதிக்கப்படுகிறது.இது  பாரபட்சம்  அல்லவா”,  என்றவர்  இன்று   கோலாலும்பூரில்   கூறினார்.