ஏஜி: எஸ்ஆர்சி மீதான விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை

agசட்டத்துறைத்     தலைவர்   முகம்மட்  அபாண்டி    அலி,    எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  பெர்ஹாட்  மீதான   விசாரணை   அறிக்கை  இன்னும்  தமக்குக்  கிடைக்கவில்லை   என்று  கூறினார்.

முன்னர்    அபாண்டி,  மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி)   விசாரணையை  மே  மாதத்துக்குள்   முடித்துக்கொள்ளும்   என்று   எதிர்பார்ப்பதாகக்  கூறியிருந்தார். இந்த   விசாரணை  எஸ்ஆர்சி-இடமிருந்து  ரிம42 மில்லியன்  பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கின்  வங்கிக்  கணக்குக்கு  வந்து  சேர்ந்தது   பற்றியது.

“நான்  இப்போதுதான்   மெக்காவிலிருந்து  வந்தேன். அலுவலகத்துக்கு   வந்து   ஒரு  நாள்தான்  ஆயிற்று.  என்ன   நடந்துள்ளது   என்பது  எனக்குத்   தெரியாது….உண்மையாலுமே.  அதனால்  உருப்படியான  பதிலை   அளிக்கவியலாது.

“நான்  இன்னும்  பார்க்கவில்லை.  தாமதமானாலும்  பரவாயில்லை.  தீர  விசாரிப்பதும்   நல்லதுதான்.  தீர   விசாரணை   செய்து கொண்டிருக்கிறார்கள்போலும்”,  என்றார்.

மே  மாத  கெடு  குறித்து   வினவியதற்கு  எம்ஏசிசியை  விரட்ட  முடியாது  அது  பலவற்றை   புலனாய்வு   செய்ய   வேண்டியுள்ளது   என்று  அபாண்டி   கூறினார்.