பீர் கொண்டாட்டம் கூடாது; ஆனால், இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் ஓகே!

Beercelebrationசிறந்த பீர் விழா 2017 நடத்தப்படுவதற்கு டிபிகேஎல் தடை விதித்துள்ளது. இவ்விழா (Better Beer Festival 2017) எதிர்வரும் அக்டோபர் 6-7லில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாஸ் கட்சியின் உலாமா தகவல் பிரிவு தலைவர் முகமட் கைருடின் அமன் ரஸாலி இத்தடை விதிப்பை வரவேற்றுள்ளார்.

கடந்த காலத்தில் இந்த விழா அடைந்த வெற்றி 2017 ஆண்டு விழாவுக்கு வழிவகுத்துள்ளது என்று கூறிய அவர், சமூகம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதிருந்தால் எதிர்வரும் விழாவும் வெற்றி பெற்றிருக்கும் என்றார்.

இந்த விழா நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அதில் அரசியல் உணர்ச்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் டிபிகேஎல் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், மைபீர் (ம) செண்ட். பெர்ஹாட், தெரிவித்துள்ளது.

இத்தடை விதிப்புக்கு மசீசவும் டிஎபியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்தடை விதிப்பை கடுமையாகச் சாடிய முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய டிஎபி உறுப்பினருமான ஸைட் இப்ராகிம், அவர்களுக்கு (பாஸ்காரர்களுக்கு) விழா வேண்டாம், பாடுதல் வேண்டாம் அல்லது மகிழ்வித்தல் வேண்டாம்.

ஆனால், அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் ஓகே, அதுவும் இளவயதினராக இருந்தால் இன்னும் நல்லது என்று அவர் இடித்துரைத்தார்.

அவர், மசீச என்ன செய்துகொண்டிருக்கிறது என்றும் வினவினார்.