போரெக்ஸ் மீதான ஆர்சிஐ முடிவுக்கு வந்தது

forexஅன்னிய  செலாவணி    வணிகத்தில்   பேங்க்  நெகாராவுக்கு    ஏற்பட்ட   பில்லியன்  கணக்கான   ரிங்கிட்   இழப்பு  குறித்து    விசாரணை   செய்ய   அமைக்கப்பட்ட   அரச  ஆணையத்தின்    நடவடிக்கைகள்   இன்றுடன்  முடிவுக்கு   வருகின்றன.

வியாழக்கிழமை  அதன்   நடவடிக்கைகளை   முடித்துக்கொள்ள   முன்பு   திட்டமிடப்பட்டிருந்தது.

எட்டாவது  நாளான  இன்று   விசாரணைகள்   முடிவுக்கு    வருவதாக   ஆர்சிஐ   தலைவர்   முகம்மட்  சிடிக்   ஹசான்   கூறினார்.

ஆணையத்திடம்   25பேர்   சாட்சியம்   அளித்தார்கள்,  42  ஆவணங்கள்   தாக்கல்    செய்யப்பட்டன.

“ஆர்சிஐ  தலைவர்   என்ற   முறையில்,   விசாரணை   நடத்திய    அதிகாரிகள்,   விசாரணைகளைக்  கண்காணித்த   வழக்குரைஞர்கள்,   சாட்சியமளித்த    சாட்சிகள்   அனைவருக்கும்    நன்றி   தெரிவித்துக்கொள்கிறேன்.

“ஆணையர்கள்   சாட்சியங்களையும்      ஆவணங்களையும்    ஆராய்ந்து    பேரரசரிடம்  ஆணையத்தின்   பரிந்துரைகளைத்  தாக்கல்    செய்வார்கள்”,  என்று  சிடிக்  கூறினார்.