மகாதிர்: பிரதமர் மேயிடம் எதை வாங்குவதற்கு நஜிப் பேசினார்?

 

Najibandmayகடந்த வாரம் பிரதமர் நஜிப் அமெரிக்க அதிபர் டிரம்பை வாசிங்டனில் சந்தித்தது பற்றி கடுமையாக விமர்சித்திருந்த முன்னாள் பிரதமர் மகாதிர், அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் போது நஜிப் லண்டனில் பிரிட்டீஷ் பிரதமர் தெரெசா மேயிடம் என்ன பேசினார் என்று கேட்கிறார்.

குறிப்பாக, பிரிட்டீஷ் அரசிடமிருந்து ஏதாவது வாங்குவதற்கு நஜிப் முன்வந்தாரா என்ற கேள்வியை மகாதிர் எழுப்பினார்.

அநேகமாக, இரண்டொரு விமானப்படை பிரிவுக்கு ஜெட் விமானங்கள் வாங்குவதாக இருக்கலாம். “அது லண்டன் என். 10, டவுனின் ஸ்ட்ரீட்டில் படம் பிடித்துக்கொள்ளும் வாய்ப்புக்குக்கான விலையாக இருக்கலாம்”, என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

வாசிங்டனில், நஜிப் பல பில்லியன்கள் அமெரிக்காவில் முதலீடு செய்வது பற்றி டிரம்பிடம் கூறியிருந்தார். அதில் இபிஎப் யுஎஸ்$4 பில்லியன் முதலீடு செய்வதும், மாஸ் விமான நிறுவனம் 30 க்கும் கூடுதலான போயிங் விமானங்களை வாங்குவது அடங்கும்.