பியோங்யாங் சென்றுவர டிஎம்ஜே-க்குச் சிறப்புச் சலுகை: வட கொரியா வழங்கியது

tmjஜோகூர்  பட்டத்திளவரசர்   துங்கு  இஸ்மாயில்   சுல்தான்  இப்ராகிம்   எப்போது   வேண்டுமானாலும்   ஜோகூரிலிருந்து   நேரடியாக   பியோங்யாங்   செல்ல   முடியும். நேற்று    அவருக்கும்   வட  கொரிய  தூதர்   கிம்  யு  சோங்-குக்குமிடையில்   நடைபெற்ற    சந்திப்பை   அடுத்து   அவருக்கு   அச்சலுகையை    பியோங்யாங்   வழங்கியது.

“இது  மிகப்   பெரிய   கெளரவம்    ஏனென்றால்  மற்ற  உலகத்    தலைவர்கள்   முதலில்  பெய்ஜிங்   சென்று   அங்கிருந்துதான்   செல்ல   முடியும்”,  என   சதர்ன்  டைகர்ஸ்   முகநூல்  பக்கத்தில்  இடம்பெற்ற    செய்தி   கூறியது.

மலேசிய    கால்பந்து     சங்கத்    தலைவருமான    துங்கு   இஸ்மாயில்,  வெளியுறவு,  நடப்பு   விவகாரங்கள்   பற்றியும்     ஆசிய  கிண்ணத்துக்கான  தகுதிச்  சுற்றில்   பி-பிரிவுக்கான   இறுதி   ஆட்டம்   குறித்தும்  விவாதிப்பதற்கு  கிம்மைச்    சந்தித்தார்.

ஆட்டக்காரர்கள்   மற்றும்   குழு   அதிகாரிகள்   ஆகியோரின்   பாதுகாப்பை    உறுதிப்படுத்த    ஆவன   செய்யப்படும்  என   இரு   நாடுகளும்   உறுதிகூறியதாகவும்   அச்செய்தி   கூறிற்று.