தாபிஸ் தீ: விசாரணைக்குப் பின்னரே எழுவரின் நிலை தெரியவரும்

igpவியாழக்கிழமை   கம்போங்  டத்தோ  கிராமாட்   சமயப்  பள்ளிக்குத்   தீவைக்கப்பட்ட    சம்பவத்தில்   கைதான   ஏழு   இளைஞர்களின்   நிலை   விசாரணைக்குப்  பின்னரே  முடிவு   செய்யப்படும்  என்று  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ் (ஐஜிபி)  முகம்மட்  ஃபுசி   ஹருன்    கூறினார்.

“இரசாயனத்  துறை,  தீயணைப்பு   மீட்புத்   துறை   அறிக்கைகளுக்காகவும்   வேறு  சில    அறிக்கைகளுக்காகவும்   காத்திருக்கிறோம்”,  என  ஃபுசி   கூறினார்.  அவர்,   நேற்று  புத்ரா  ஜெயாவில்  துணைப்  பிரதமர்  அஹமட்   ஜாஹிட்  ஹமிடி   தலைமையில்    நடைபெற்ற   தாபிஸ்  பள்ளிகள்   பணிக்குழுவின்   கூட்டத்தில்  கலந்துகொண்ட  பின்னர்   செய்தியாளர்களைச்   சந்தித்தார்.

அவரிடம்   விசாரணைக்காக   ஏழு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டுள்ள   11-க்கும்    18-வயதுக்குமிடைப்பட்ட    ஏழு   இளைஞர்களும்   நீதிமன்றத்தில்    குற்றஞ்சாட்டப்படுவார்களா     என  வினவப்பட்டதற்கு  மேற்கண்டவாறு      பதிலளித்தார்.

பிள்ளைப்  புறக்கணிப்பு   என்ற  வகையில்   பெற்றோர்  மீதும்   நடவடிக்கை    எடுக்கப்படுமா   என்ற  கேள்விக்கு   ஐஜிபி  பதிலளிக்க  மறுத்தார்.

“நாங்கள்  ச ட்டத்துறைத்   தலைவருடன்   முதலில்  விவாதிக்க   வேண்டும். என் அதிகாரிகள்   விசாரணையை  முடிக்கும்   வேலையில்  மும்முரமாக   ஈடுபட்டிருக்கிறார்கள்”,  என்றார்.