மீண்டும் விஸ்பரூபம் எடுக்கவிருக்கும் அல்கைதா ! தலைவன் யார் தெரியுமா ?

al quidaஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பலவீனமடைந்து வரும் நிலையில், ஒஸாமா பின் லேடன் உருவாக்கிய அல் கைதா இயக்கம் மீண்டும் தலைதூக்கும் அறிகுறிகள் காணப்படுவதாக பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் நிலையம் அறிவித்துள்ளது. இரட்டை கோபுரத் தாக்குதல் இடம்பெற்று பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அல் கைதா பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தீப்பிடித்து எரியும் இரட்டை கோபுரங்களின் பின்னணியில் ஒஸாமாவின் முகம் தெரிவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது இளைய மகன் ஹம்ஸாவின் படமும் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் நிறுவனம், “ஹம்ஸாவுக்கு தற்போது 28 வயதாகிறது. ஐ.எஸ். இயக்கம் பலவீனமடைந்திருப்பதையடுத்து,

உலகெங்கும் உள்ள ஜிஹாதிகளை ஒரு தலைமையின் கீழ் ஒன்று திரட்டும் முயற்சியில் அல் கைதா ஈடுபடவுள்ளது. தற்போது ஹம்ஸாவுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெகு விரைவில், ஹம்ஸாவின் தலைமையில் அல் கைதா இயக்கம் ஒன்று திரண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.com