வான் ஜுனாய்டி: சரவாக்கில் மகாதிர் பேச்சுக்கு மதிப்பில்லை

pppடாக்டர்    மகாதிர்    முகம்மட்டின்   வாரக்கடைசி   கூச்சிங்  பயணத்தால்   சரவாக்   அரசியலில்    எந்த   மாற்றமும்   ஏற்படாது   என்கிறார்   பார்டி  பெசாகா   பூமிபுத்ரா   பெர்சத்து  (பிபிபி)  உச்சமன்றத்  தலைவர்   வான்  ஜுனாய்டி   துவாங்கு   ஜப்பார்.

“அதனால்   எந்தத்  தாக்கமுமில்லை”,  என      இயற்கைவள,  சுற்றுசூழல்   அமைச்சரான   வான்  ஜுனாய்டி இன்று   கோலாலும்பூரில்  கூறினார்.

“மகாதிர்  பிரதமராக  இருந்தபோது  சரவாக்குக்கு   எதுவுமே  செய்யவில்லை. வெறும்  பேச்சுத்தான்.

“அ்ன்வாரும்  அப்படித்தான்.  சரவாக்கில்  அரை  பில்லியன்  ரிங்கிட்  செலவில்  31  பள்ளிகள்  கட்டித்தருவதாக  வாக்குறுதி   அளித்தார்.  ஒரு  காசுகூட   கொடுக்கவில்லை”.

அன்வார்    தலைமையில்   பிஎன் -ஆதரவு  நாடாளுமன்ற   உறுப்பினர்களின்  கூட்டம்   ஒன்று   நடந்ததை    நினைவுகூர்ந்த  வான்  ஜுனாய்டி,  அக்கூட்டத்தில்  சரவாக்கில்  சிறுசிறு  திட்டங்களுக்காக   எம்பிகளுக்கான  ஒதுக்கீட்டை   அதிகரிக்க   வேண்டும்   என்ற   பரிந்துரையை  அன்வார்  நிராகரித்தார்   என்றார்.

“ ‘சரவாக்குக்கு  அவ்வளவு  பணம்  கொடுக்க  முடியாது’  என்று   ஒரு கோப்பை   எடுத்து  என்மீது   வீசி  எறிந்தார்.

“20  ஆண்டுகளாக   நான்  இதை   வெளியில்  சொல்லவில்லை”,  என  வான்  ஜுனாய்டி   கூறினார்.

நேற்றிரவு  கூச்சிங்கில்  பக்கத்தான்   கூட்டத்துக்கு  8,000  பேர்   வந்திருந்தைச்  சுட்டிக்காட்டியதற்கு   அது   ஒன்றும்   பெரிய கூட்டம்  அல்ல    என்றார்,

“2013 பொதுத்  தேர்தலில்   இதைவிட   பெரிய   கூட்டம்    எங்களுக்கு   வந்தது.

“அவரது (மகாதிரின்)  வாயிலிருந்து  என்ன   அபத்தம்   வரப்போகிறது  என்பதைக்  கேட்பதற்காக   பலர்   வந்திருப்பார்கள்”,  என்றாரவர்.