பினாங்கு வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ரிம2.6பில்லியன் செலவிடப்பட்டது என்று வலியுறுத்துகிறார் அமைச்சர்

FloodinPenangபினாங்கு மாநில வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு புத்ரா ஜெயா போதுமானவற்றை செய்யவில்லை என்று கூறப்படுவதை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜுனய்டி துவாங்கு ஜாபார் மறுத்துள்ளார்.

மத்திய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து பினாங்கில் வெள்ளப் பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ரிம2.58பில்லியன் செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்திட்டங்களின் பட்டியல் தம்மிடம் இருப்பதாக இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கூறினார். ஆனால் அதை அவர் செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை.

தொடங்கப்படாத ஒரே ஒரு திட்டம் சுங்கை பினாங் சம்பந்தப்பட்டதாகும். அத்தாமதத்திற்கு காரணம் பினாங்கு மாநில அரசு நிலக் கையடக்கம் பற்றிய பிரச்சனைகளைத் தீர்க்க தவறிவிட்டதாகும் என்றாரவர்.

“மாநில அரசு நிலப் பிரச்சனைக்கு 2016 ஆம் ஆண்டிலில்தான் தீர்வு கண்டது. அதற்கு அதிகமான நேரம் எடுக்கப்பட்டது என்பதுடன் அது ஒரு நீண்ட நடவடிக்கையாகும். அது தவிர்க்க முடியாததாகும்”, என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தத் தாமதத்தின் காரணமாக இத்திட்டம் 2020 இல்தான் நிறைவடையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

நேற்ரு, மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், மாநில அம்னோ தலைவர் ஸைனால் அபிடின் ஓஸ்மான் பினாங்கு வெள்ள நிவாரண வேலைக்காக ரிம2பில்லியன் செலவிட்டிருப்பதாக கூறிக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

தாம் மேற்கொண்ட ஆய்வின்படி புத்ரா ஜெயா இத்திட்டங்களுக்கு ரிம300 மில்லியன் மட்டுமே செலவிட்டுள்ளது என்று குவான் எங் கூறியதோடு ஸைனால் அடிபிடின் மற்றும் புத்ரா ஜெயா அவர்களின் கூற்றுக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.