முன்னாள் ஐஜிபி காலிட் பொதுப் போகுவரத்து பாதுகாப்பை உயர்த்துவார் என்று பிரசாரனா நம்புகிறது

EXigpparaகடந்த செப்டெம்பர் 5 இல் பதவி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜிபி காலிட் அபு பாகார் இன்று பிரசாரனாவின் தலைவாராக வேலையைத் தொடங்கினார்.

இன்று வேலையில் சேர்ந்த காலிட், அங்கு நடைபெற்ற ஒரு கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், அவர் சமூக ஊடகங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

பிரசாரனாவின் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான அஸ்மி அப்துல் அசிஸ் அந்நிகழ்ச்சியில் காலிட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

காலிட் அபு பாக்காருக்கு போலீஸ் படையில் 40 வருட அனுபவங்கள் இருந்ததாகவும் அவரது சேவை பொதுப் போக்குவரத்து துறைக்கு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

அவரது வழிகாட்டுதலுடன் நாம் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என்றாரவர்.

பொதுப் போக்குவரத்து துறையில் எந்த அனுபவம் இல்லாத காலிட் அபு பாகார் பிரசாரனாவின் தலைவராக நியமிக்கப்பட்டது பரவலாகக் குறைகூறப்பட்டது.