தீயணைப்பு இலாகா: தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பாதுகாப்பானதல்ல

 

தீ மற்றும் மீட்பு இலாகா சோதனையிட்ட 956 தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பள்ளிகள் மட்டுமே பாதுகாப்பானவை என்று ஊடகச் செய்திகள் இன்று கூறுகின்றன.

மீதமுள்ள பள்ளிகள் தீயினால் பாதிக்கக்கூடிய அபாயத்தில் இருக்கின்றன. அவை உடனடியாக தீ பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அல்லது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அப்பள்ளிகள் மூடப்படுவதும் அதில் அடங்கும்.

தீயின் போது, தப்பிச் செல்வதற்கு பாதுகாப்பான வழியை தயார் செய்வது அப்பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் அடங்கும் என்று அந்த இலாகாவின் தலைமை இயக்குனர் வான் முகமட் நூர் இப்ராகிம்மை மேற்கோள்காட்டி இன்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை நாங்கள் கடுமையான விவகாரமாகக் கருதுகிறோம். தீ சம்பவங்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தடுக்க உடனடியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றி 389 அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் விடுத்துள்ளோம் என்று வான் முகமட் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி கூறுகிறது.