பிரிட்டனிலிருந்து திரும்புகிறார் வேதமூர்த்தி

ஐந்தாண்டுகளாக லண்டனில் நாடுகடந்துவாழும்  இண்ட்ராப்  தலைவர் பி.வேதமூர்த்தி ஆக்ஸ்ட் முதல் நாள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேதமூர்த்தி ஜூலை 2-இல், பிரிட்டிஷ் அரசியாருக்கு எதிரான இண்ட்ராப் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் பதிவுசெய்வார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குள் அவர் திரும்பி வருவார் என்று இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன் கூறினார்.

2007-இல், கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாட்டைவிட்டுத் தப்பியோடிய வேதமூர்த்தி இப்போது ஐநா வழங்கிய பயண ஆவணத்தை வைத்து பயணம் செய்து வருகிறார். அவரது மலேசிய கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

“அந்த ஐநா ஆவணம் மலேசியா தவிர எல்லா நாடுகளுக்கும் செல்லலாம் எனக் கூறுகிறது. ஆனால், எதையும் எதிர்கொள்ள நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்”, என்று கணேசன் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் இன்று  கூறினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)