ஜிஎல்சி-க்களும் பணத்தை இழக்கும் கலையும்

“அவற்றுக்கு மூலப் பொருட்கள் இயற்கை அன்னையிடமிருந்து  கிடைக்கின்றன. அவற்றை அவை மக்களிடம் விற்கின்றன. ஆனால் பெரும் இழப்பை சந்திக்கின்றன. இது என்ன வகையான தொழில்?”

பூஞ்சாக் நியாக இயக்குநர்களுக்கான ஊதியக் கட்டணம் 17.2 மில்லியன் ரிங்கிட் ! ‘கிறுக்குத்தனமானது’

உங்கள் அடிச்சுவட்டில்: நாம் பயன்படுத்துகின்ற தனியார்மய முறை வேலை செய்யவில்லை என்பதே உண்மை. தார்மீக உணர்வுகள் இல்லாமை, முகவர் பிரச்னைகள், தேசிய நீர் வளச் சேவை ஆணையம் ( Span ) போன்ற அதிகாரம் இல்லாத மேற்பார்வை அமைப்புக்கள் ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணங்களாகும்.

பெரும்பாலான தனியார் மய நடவடிக்கைகள் பொதுப் பணத்தை தனியார் நன்மைக்காக உறிஞ்சும் அமைப்புக்களாகவே திகழ்கின்றன.

மேற்பார்வை அமைப்புக்கள் ஆதாயத்தை மட்டும் கவனிக்காமல் சலுகை பெற்ற நிறுவனங்கள் அதிகக் கட்டணங்களை விதிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிலாங்கூரை மீண்டும் பிடிக்கப் போவதாக பிஎன் -னும் கூட்டரசு அரசாங்கமும் சூளுரைத்துள்ளன. அவற்றின் ஆட்சியில் அதிகார அத்துன்மீறல்கள் அப்படமாக தெரியும் வேளையில் அத்தகைய எண்ணத்தை அவை எப்படித் தான் கொண்டிருக்க முடியும் ?

ஸ்டார்ர்: பொதுப்பயனீட்டு அமைப்புக்கள் தொழில் கழகங்களாக மாற்றப்படலாம். தனியார் மயமாக்கப்படக் கூடாது. அவை அம்னோ/பிஎன் சேவகர்களிடம் ‘கொள்ளையடிக்க’ ஒப்படைக்கப்படக் கூடாது.

தொழில் கழகங்களாக இயங்கும் போது அவை வழக்கமான நிறுவன ஆளுமை நடைமுறைகளுக்கு உட்பட வேண்டும். பொது அமைப்புக்கள் என்ற முறையில் அவையும் அவற்றுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சுக்களும் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

ஒஹாகிம்: தெனாகா நேசனல் பெர்ஹாட், டெலிகோம் மலேசியா போன்ற பொதுப் பயனீட்டு நிறுவனங்கள் மக்கள் கஷ்டப்பட்டு தேடும் பணத்தை பறிக்கின்றன. ஆனால் தரம் குறைந்த சேவைகளை வழங்குகின்றன.

ஆனால் அரசாங்க அமைப்புக்களைப் போல அவை மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை.

பிரதமர், அரசாங்கத் துறைகளின் தலைவர்களுடைய மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் பொது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்படும் போது அரசாங்கச் சார்புடைய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைப் பற்றி எதுவுமே வெளியில் தெரிவதில்லை. பிரதமரைக் கூட எளிதாகச்  சந்தித்து விடலாம். ஆனால் அந்த அரை வேக்காடு ஜிஎல்சி வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பது மிகவும் கடினம்.

அடையாளம் இல்லாதவன் #06659895: மறைப்பதற்கு ஏதோ விஷயமும் கெட்ட நோக்கமும் கொண்ட ஒரு நிறுவனம் மட்டுமே தனது இயக்குநர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியங்களை வெளியிட மறுக்கும்.

2மலேசியா: இண்டா வாட்டார் கொன்சோர்ட்டியம் என்ற தேசிய கழிவு நீர் நிறுவன இயக்குநர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் பற்றி ஏன் எந்தத் தகவலும் இல்லை ? அங்கும் பலர் மக்கள் பணத்தை ஒவ்வொரு மாதமும் ‘உறிஞ்சி’ கொண்டிருப்பது திண்ணம்.

எல்லா மலேசியர்களையும் கொள்ளையடித்துக் கொண்டு எந்த விதமான நன்மையையும் கொடுக்காத மலேசிய தனியார் மயத் திட்டம் என்று அழைக்கப்படும் முறையின் உற்பத்திகளே பூஞ்சாக் நியாகா, இண்டா வாட்டர், பிளஸ் ஆகியவை.

ஒய்எப்: அம்னோ மலாய்க்காரர்களுக்கு அல்ல என்பதற்கு இது இன்னொரு உதாரணம். . அம்னோ அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்மையைத் தரும் தீவிர இனவாதக் கொள்கைகளைப் பயன்படுத்தி பணக்காரர்களாக விரும்பும்  ஊழல்வாதிகளுக்காக அம்னோ இயங்குகிறது. ஆகவே அம்னோ மலாய்க்காரர்களையே ஏமாற்றும் வேளையில் அவர்கள் ஏன் அம்னோவை ஆதரிக்க வேண்டும் ?

அடையாளம் இல்லாதவன்#06001393: இது தான் பிஎன் பாணி: நல்ல ஆதாயத்தைத் தரும் குத்தகைகளை சேவகர்களுக்கு கொடுப்பது, மக்களை கொள்ளையடிப்பது அடுத்த மக்களுக்கு முன்னுரிமை (‘rakyat didahulukan’) என்ற சுலோகத்தைச் சொல்வது.

இங்: ஆட்சி புரியும் அரசாங்கம் பொதுச் சொத்துக்களை எடுத்துக் கொண்டு தனது பேராளர்களுக்கு அவற்றைக் கொடுத்துள்ளதற்கு அவை நல்ல உதாரணங்களாகும். பேராளர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்கின்றனர்.

அர்கோனிஸ்ட்: சபாஷ் சலுகை ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட முறையீட்டு வழக்கில் எழுத்துப்பூர்வமான தீர்ப்பு ஒர் ஆண்டு முடிந்தும் இன்னும் கொடுக்கப்படவில்லை. நமது நீதித் துறை எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை அது மலேசியர்களுக்கு சொல்கிறது.

டிவிஆர்பி: அவற்றுக்கு மூலப் பொருட்கள் இயற்கை அன்னையிடமிருந்து  கிடைக்கின்றன. அவற்றை அவை மக்களிடம் விற்கின்றன. ஆனால் பெரும் இழப்பை சந்திக்கின்றன. இது என்ன வகையான தொழில் ?

TAGS: