செம்பருத்தியில் செய்திச்சுருக்கம்!

செம்பருத்தியின் வாசகர்களுக்கு,

மலேசியாவின் முதன்மையான தமிழ் இணையத் தளமாக செம்பருத்தி.காம் உருவாக வாசகர்களாகிய நீங்கள்தான் காரணம்.

தற்போது 39,320 வாசகர்கள் 104,429 முறை எங்களின் இணையத்தளத்தை வலம் வருகிறார்கள். அவர்கள் 362,188 பக்கங்களைப் பார்வையிடுகிறார்கள். semparuthi visit (2)

பிப்ரவரி 25, 2008 -இல் தொடங்கப்பட்ட எங்களின் இந்த இணையத்தளம் ஐந்தாண்டுகளைக் கடந்துள்ளது. இதன் வழி முதன்மையான உண்மையான தகவல்களை வழங்கும் தளமாகவும் விழிப்புணர்ச்சிக்கு வித்திடும்  களமாகவும் செம்பருத்தி.காம் செயல்பட்டு வருகிறது.

எங்களின் இந்த அரிய வளர்ச்சிக்குக் காரணம் – தகவல் தேடும் மக்களின் தாகம்தான்! மின்னியல் முன்னேற்றம் இதற்கு பெருமளவு வழிவகுத்துள்ளது.

முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் எழுச்சி குரலாக செம்பருத்தி.காம் திகழ வேண்டும் என்பதில் கணிசமான பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

Cyber attack against semparuthiஎங்களின் செய்திகளை உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் மின்னியல் வழியிலும் அச்சடிப்பு வழியிலும் மறுபிரசுரம் செய்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களும் சமுக ஆய்வாளர்களும் எங்களின் தகவல்களை மேற்கோள் காட்டுகிறார்கள். விவாத மேடைகளில் பரிமாற்றம் செய்கிறார்கள்.

இவற்றில் எங்களுக்கு மிகவும் வருத்தமளிப்பது, சிலர் அதில் ‘செம்பருத்தி.காம்’-க்கு நன்றி என்பதைக் கூட குறிப்பிடுவதில்லை. இதைச்  சம்பந்தப்பட்ட தரப்பினர் உணர வேண்டும். தார்மீகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இனிவரும் காலங்களில் செம்பருத்தி செய்திச் சுருக்கத்தை மட்டுமே வெளியிடும். இதைத் தொடர்ந்து செம்பருத்தி தனது செய்தித் தரத்தை உயர்த்தவும், ஆய்வுக் கட்டுரைகளை அதிகமாக்கவும் திட்டமிட்டுள்ளது.

அன்புடன்

செம்பருத்தி ஆசிரியர்

TAGS: