மெட்ரிகுலேஷன் இன்னமும் பூமிபுத்ராக்களுக்குதான்!

matriஅண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த கல்வி அமைச்சர் , மெட்ரிகுலேஷன் இன்னமும் பூமிபுத்ராக்களுக்குதான் என்று குறிப்பிட்டுள்ளார் என்கிறார் கா. ஆறுமுகம்.

1998-ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் கல்வி அமைச்சால் தொடங்கப்பட்ட இந்த மெட்ரிகுலேஷன் திட்டம் பூமிபுத்ரா மாணவர்களுக்கானது. அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ துறைகளில் அவர்களை அதிகப்படியாக நுழைப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், 2003-ஆம் ஆண்டு முதல் 10 விழுக்காட்டு கோட்டா மற்ற இனங்களுக்குத்  திறன் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

மெட்ரிகுலேஷன் அனைவருக்கும் என்ற கமலநாதனின் அறிக்கை இதற்கு முரண்பாடானது என்ற சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான  ஆறுமுகம், “மெட்ரிகுலேஷன் நுழைவு மட்டுமல்ல, பல்கலைக்கழக நுழைவுகளிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால் கொள்கை அளவிலான மாற்றம் வேண்டும், ஆனால் அது நமக்கு கிடைக்காது” என்கிறார்.

jayakumarசுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் அவர்களின் கேள்விக்குக் கடந்த 27.7.2013-இல் எழுத்து பூர்வமாக பதில் அளித்த கல்வி அமைச்சர், 2013-இல் இந்தியர்களுக்கு 1,500 இடங்கள் வழங்கப்பட்டதிற்கான காரணம் பிரதமர் 27.2.2012-இல் அளித்த வாக்குறுதியே காரணம் என்கிறார்.

ஒட்டு மொத்தமாக அரசாங்க அமைப்பு முறைகளையும் பணித்துறைகளையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள அம்னோ அதன் இனவாத பிடியை எளிதில் விடாது. நமக்கான தீர்வுகள் சலுகை அடிப்படையிலும் தவணை முறையிலும்தான் கிடைக்கும்.  அவைக்கூட எதிர்வினை போராட்டம் இருக்கும்வரையில்தான் உண்டு என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.

TAGS: