பக்காத்தான்: முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்

heraldபக்காத்தான் ரக்யாட், முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற அதன்  நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

அண்மைய முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்க இன்று ஒன்றுகூடிய பக்காத்தான் தலைவர்கள் இதை அறிவித்தார்கள். அது பற்றி மேலும் விவரிக்க அவர்கள் மறுத்தனர்.

நெருக்கிக் கேட்டதற்கு, “முன்பிருந்த நிலைதான் இப்போதும். நாங்கள் முன்பு வெளியிட்ட அறிக்கையைப் பாருங்கள். அதில் சொல்லுக்குச் சொல் என்னால் நினைவுகூற முடியவில்லை”,  என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார்.

இவ்விவகாரம் குறித்து  2010-இல் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்த பக்காத்தான், முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை, எந்தவொரு சமயத்தையும் இழிவுபடுத்தாதவரை, பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது.