பிரதமரே, உங்கள் வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்!

PAS - PM's life style1பிரதமரை அவருடைய வாழ்க்கை முறையை மாற்றிகொள்ளுமாறு  கேட்டுக்கொள்வது உலக நடப்புக்கு முரணானதோ, நியாயமற்றதோ அல்ல. பக்கத்தான் மாநில அரசாங்கத் தலைவர்கள் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை என்று பாஸ் இளஞர் பிரிவு தலைவர் ஒருவர் கூறுகிறார்.

பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்திற்கான மின்சாரக் கட்டணம் ரிம2.5 என்ற தகவல் மீது கருத்து தெரிவித்த கூட்டரசுப் பிரதேச பாஸ் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் முகமட் சுகைமி இத்தொகையை உதவி தேவைப்படுவோருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றார்.

கிளந்தான், கெடா மற்றும் திரங்கானு ஆகிய மாநில அரசுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த பாஸ் தலைவர்கள் மந்திரி புசார்களாக செயல்பட்ட போது அவர்கள் அதிகாரத்துவ இல்லங்களில் வாழவில்லை. மாறாக, அவர்களின் சொந்த வீட்டில்தான் வாழ்ந்தனர் என்றார்.

SONY DSC“உண்மையில், அவர்கள் தங்களுடைய அனைத்து அலவன்ஸ்களையும், உபசரிப்பு அலவன்ஸ் உட்பட, மக்களிடமே கொடுத்தனர்.

“(முன்னாள் கிளந்தான் மந்திரி புசார்) நிக் அப்துல் அசிஸ் அவருடைய பல்லாயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள அலவன்ஸ்கள் அனைத்தையும் கிளந்தான் மாநில அரசிடமே திருப்பிக் கொடுத்தார்”, என்று சுகைமி மேலும் கூறினார்.

அவ்வாறே, பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங்கும் மாநில காரியங்களுக்கான பயணம் மேற்கொள்ளும் போதும் சிக்கன வகுப்பில்தான் பயணம் செய்கிறார் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மக்கள் அவர்களுடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தலைவர்கள் சுலோகம் எழுப்புகிறார்கள். ஆனால், அவர்கள் அதற்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள தவறிவிடுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.