கெடா மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற மசீச தீவிரம்

MCA - Chua, Kedahகெடா மாநில ஆட்சிக்குழுவில் கெராக்கானுக்கு உரிய இடம் காலியாக இருக்கிறது. அதன் மேல் மசீச குறிவைத்துள்ளது. மசீச தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் அந்த இருக்கை மசீசவுக்கும் வேண்டும் என்கிறார்.

மாநில ஆட்சிக்குழுவில் இன்னும் நிரப்பப்படாத இரு இருக்கைகள் இருக்கின்றன. அவை கெராக்கான் மற்றும் மசீச ஆகிய இரண்டுக்கும் தலா ஒரு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது. கெராக்கானுக்கு கெடா மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதி எவரும் இல்லை. மசீசவுக்கு இருவர் இருக்கின்றனர்.

ஆகவே, கெராக்கானுக்கு உரிய அந்த இருக்கையைக் கைப்பற்ற மசீசவுக்கு அலாதி ஆசை.

அரசாங்கப் பொறுப்பு எதனையும் ஏற்பதில்லை என்று மசீச முன்னர் எடுத்திருந்த முடிவு கடந்த அக்டோபர் 20 இல் நடைபெற்ற அதன் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் அதன் பிரதிநிதிகள் மாநில அளவில் அரசுப் பதவிகளை ஏற்கலாம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

பிரதமர் நஜிப்பிலிருந்து உள்துறை ஹமிடி மற்றும் கெடா மாநில மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் வரையில் கடந்த பொதுத் தேர்தலில் சீன சமூகத்தினர் பாரிசானுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி சீனர்களை சாடினர்.

ஆனல், மசீச அவர்களின் காலைப் பிடிக்கத் தயாராகி விட்டதாகத் தெரிகிறது.