கோயில் உடைப்பு விவகாரம்: இரு எம்பிக்கள் வெளியேற்றப்பட்டனர்

 

PKR - MPS - Parliamentநாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகர் அமின் மூலியா கோலாலம்பூர், ஸ்ரீ மூனீஸ்வர் கோயில் பகுதி உடைக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா எழுப்புவதிலிருந்து அவரை நிறுத்தியதோடு நாடாளுமன்ற நடவடிக்களைத் தாமதப்படுத்தியதற்காக அவரை அவையிலிருந்து வெளியேற்றினார்.

அடுத்து, வி.சிவகுமார் (டிஎபி-பத்துகாஜா) வெளியேற்றப்பட்டார். இக்கோயில் விவகாரத்தை PKR - MPS - Parliament1எழுப்பக்கூடாது என்ற அவைத் தலைவரின் முடிவு குறித்து கேள்வி கேட்டதற்காக சிவகுமாரை அவையின் துணைத் தலைவர் முகமட் ஸைட் வெளியேற்றினார்.

ஆர். சிவராசா இக்கோயில் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக வெளியேற்றப்பட்ட இரண்டாவது பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

முதலாவதாக என். சுரேந்திரன் வெளியேற்றப்பட்டார்.

சிவராசா இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதைத் தடுக்கும் போது அவைத் தலைவர் பண்டிகர், “இப்பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. இது முன்பே எழுப்பப்பட்டுள்ளது”, என்று கூறினார்.