பக்காத்தானோ பிஎன்னோ பாலின அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பது தப்பு

1 ambikaபினாங்கு  முதலமைச்சர்  லிம் குவான் எங், மாநில சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட்டை “இனவாத பாட்டி” என்று வருணித்ததற்காக  மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட  பல தரப்பினரின் குறைகூறலுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார். .

ஆகக் கடைசியாக  லிம்முக்கு கண்டனம் தெரிவித்திருப்பவர்  முன்னாள் பெர்சே தலைவர் எஸ்.அம்பிகா.

“பாலியல் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பதையும் பேசுவதையும் கண்டித்து வந்திருக்கும் லிம்  ‘பாட்டி’ என்றுரைத்ததை ஏற்க முடியவில்லை.

“பெண்கள் அன்றாட வாழ்வில் பால் அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். தலைவர்கள்தான் நல்ல முன்மாதிரியாக திகழ வேண்டும்”, என்றாரவர்.

எம்பி-கள் ஏதோ வேடிக்கை செய்வதாக நினைத்துக்கொண்டு பால் அடிப்படையில் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆனால், அது வேடிக்கை அல்ல என்று அம்பிகா கூறினார்.

என்றாலும், மன்னிப்பு கேட்ட லிம்மை அவர் பாராட்டினார்.

அரசியல்வாதிகள், அவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.

“லிம், பினாங்கில் சாதனை செய்திருக்கிறார் என்பதற்காக பலராலும் மதிக்கப்படுபவர்தான்.

“அதற்காக அவரைக் குறை சொல்லக்கூடாது என்பதில்லை”, எனவும் அம்பிகா கூறினார்.

 

 

 

TAGS: