சிலாங்கூர் டிஎபி தலைவர் டோனி புவா

 

DAP -Selangor Tonyபெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சிலாங்கூர் மாநில டிஎபியின் புதிய தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் தெரசா கோவின் இடத்தை நிரப்புகிறார்.

“பொறுப்பு மிக்க இப்பதவியை மிகப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சிலாங்கூரில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டிஎபி வெற்றி பெற்றுள்ள இக்கட்டத்தில் நான் இப்பதவிக்கு வருகிறேன். இதை மிஞ்சுவது கடினம்”, என்று புவா கூறினார்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இத்தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்ற சிலாங்கூர் சட்டமன்ற தலைவர் ஹன்னா இயோ உதவித் தலைவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

 

 

 

TAGS: