நஜிப்: மசீச-வுக்கு அரசியல் வயாக்ரா ஊசி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்

1 mcaபிரதமர்  நஜிப் அப்துல் ரசாக், மசீச-வின் மனத்தளர்ச்சியைப் போக்கி மன ஊக்கத்தைக் கொடுக்க அதற்குத் தேவை “அரசியல் வயாக்ரா”, எனக் கூறினார்.

மசீசவின் 60ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து  உரையாற்றியபோது நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார்.

“உங்களிடம் உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் இருக்கிறார்கள். அதாவது உடல் இருக்கிறது. ஆன்மா பலவீனமாக உள்ளது.

“கொஞ்சம் அரசியல் வயாக்ராதான்  தேவை…. தேவையான மருந்தைக் கொடுக்குமாறு .சுகாதார அமைச்சரிடம் சொல்வோம்”, என்று பிரதமர் கிண்டலடித்தார். கூட்டத்தினர் அதை மிகவும் ரசித்தனர். அதற்கு அடையாளமாக பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

TAGS: