கல்வி செயல்திட்டம் ஒரு மொழிக் கல்வி மட்டுமே என்ற நிலையை நோக்கி நகர்கிறது

dong zongதேசிய கல்வித் திட்டம் என்பது நாட்டில் “ஒருமொழிக் கல்வி மட்டுமே” என்ற நிலையை உருவாக்கும் 1956ஆம் ஆண்டு ரசாக் அறிக்கையின் “முடிவான குறிக்கோளை”ச் செயல்படுத்தும் ஒரு வழிமுறையாகும் எனச் சீனக் கல்விநலக் குழுவான டொங் சொங் கூறியுள்ளது.

கல்வி செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள் என கல்வி துணை அமைச்சர் மேரி யாப் அண்மையில் குற்றம் சாட்டியதற்கு டொங் சொங் குழுவினர்  இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

தாய்மொழிக் கல்வி பற்றி டொங் சொங் பயப்படுவது வீண்.  செயல்திட்டத்தில் தாய்மொழிப் பள்ளிகளுக்காகவே ஒரு தனி அத்தியாயம் உண்டு என்று மேரி கூறினார்.

ஆனால், டொங் சொங் அதை ஏற்கவில்லை.

“கல்வி செயல்திட்டம் பற்றி அறிவித்த துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின், ரசாக் அறிக்கையின் கொள்கைகளையும் நோக்கங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியுமா என்பதை அறிய மிகுந்த கவனம் செலுத்தப்போவதாக பல இடங்களில் குறிப்பிட்டு வந்துள்ளார்”, என டொங் சொங் கூறியது.

அச்செயல்  திட்டத்தில் தாய்மொழிக் கல்வி பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சீன, தமிழ்ப் பள்ளிகளை “விளிம்பு நிலைக்கு”த் தள்ளிச்செல்லும் “சாதகமற்ற கொள்கைகள்” அதிகரித்து வருவதாக அது கூறிற்று.

மற்றவற்றோடு, “ஒரே-இன நாடு” என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்  தாய்மொழிப் பள்ளிகளில்கூட பகாசா மலேசியா கற்பிக்கும் நேரம் கூட்டப்பட்டிருப்பதை அது சுட்டிக்காட்டியது.

TAGS: