மசீச தேர்தல்: லியாவ்-வீ வெற்றி பெற்றனர்

 

MCA - Liow - Weeலியாவ் தியோங் லாய் மற்றும் வீ கா சியோங் ஆகிய இருவரும் மசீச தேர்வில் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர்.

1,186 வாக்குகளைப் பெற்ற லியாவ் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் 1,000 வாக்குகளைப் பெற்ற கான் பிங் சியுவை தோற்கடித்தார். மசீச முன்னாள் தலைவர் ஓங் தீ கியாட் 160 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

மசீச துனைத் தலைவருக்கான போட்டியில் வீ கா சியோங் 1,460 வாக்குகளைப் பெற்று டோனல்ட் லிம்மை தோற்கடித்தார். டோனல்ட் 927 வாக்குகளைப் பெற்றார்.

மசீச உதவித் தலைவர்களாக லீ சீ லியோங் (1,642), ஹவ் கோ சுங் (1,475), சுவா தீ யோங் (1,343) மற்றும் சியு மேய் ஃபன் (1,230) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 

 

TAGS: