வேதமூர்த்தியின் பதவி துறப்பில் ஒரு குழப்பம்!

 

1-hindrafபிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி இன்று பின்னேரத்தில் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் நேரடியாக அளித்ததாக முன்பு கூறப்பட்டது.

ஆனால், இப்போது வேதமூர்த்தி அவரது பதவி விலகல் கடிதத்தை இன்று மாலை மணி 5.05க்கு கொடுத்ததாக பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் (பிஎச்எம்) செயலாளர் பி. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“அவரின் பதவி விலகல் கடிதத்தில் தற்போதைய நிருவாகத்திலிருந்து தமது கடமைகளை துறப்பதற்கான காரணங்களை விளக்கியிருக்கிறார்” என்று ஒரு சிறிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, த ஸ்டார் ஓன்லைன் பிரதமர்துறை இலாகாவை மேற்கோள் காட்டி அவரின் கடிதம் இன்று 5.00 மணிக்கு பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறுகிறது.

ஆனால், சின் சியு டெய்லி ரமேஷை மேற்கோள் காட்டி வேதமூர்த்தி இன்று பின்னேரத்தில் பதவி துறந்ததாக குறிப்பிடிருந்தது.

வேதமூர்த்தியின் செனட்டர் பதவி என்ன ஆயிற்று? தமக்கு வேதமூர்த்தியிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை அல்லது அது சார்பாக எந்த கடிதமும் பெறவில்லை என்று செனட் அவையின் தலைவர் அபு ஸாஹார் உஜாங் கூறியதாக த மலேசியன் இன்சைடர் கூறியுள்ளது.

இருப்பினும், மலேசியகினிக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் வேதமூர்த்தி தமது இரு பதவிதளையும் துறந்து விட்டார் என்று பிஎச்எம் தேசிய ஆலோசகர் என். கணேசன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மலேசியகினிக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் வேதமூர்த்தி தமது இரு பதவிதளையும் துறந்து விட்டார் என்று பிஎச்எம் தேசிய ஆலோசகர் என். கணேசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

TAGS: