டிஎபி: அகோங்கிற்கு சவால்விடும் பெர்காசாவின் தேசிய ஒற்றுமை கூட்டணி!

DAP-Lim-Kit-Siang-urinationமலாய் இனவாத அமைப்பான பெர்காசாவும் இதர அழுத்தமளிக்கும் இஸ்லாமிய குழுக்களும் அவர்களின் சொந்த தேசிய ஒற்றுமை கூட்டணி (National Unity Front) ஒன்றை அமைத்துள்ள  நடவடிக்கை அகோங்கிற்கே சவால் விடுவதாகும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.

பேரரசரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்திற்கு (NUCC) எதிராக டிஎபியும் அதே போன்ற ஒன்றை செய்திருந்தால், டிஎபி ஆட்சியாளர்களை அவமானப்படித்தி விட்டது என்று குற்றம் சாட்டியிருப்பார்கள் என்று லிம் கூறினார்.

“பெர்காசா செய்திருப்பதை டிஎபி அல்லது ஏதாவதொரு பக்கத்தான் உறுப்பு கட்சிகள் செய்திருந்தால், அதவது தேசிய ஒற்றுமை ஆலோசணை மன்றத்தின் மீதான பேரரசரின் உரைக்கு எதிராகச் செயல்பட்டிருந்தால், அவர்கள் நம்மை தேசத்திற்கும் அகோங்கிற்கும் எதிரானவர்கள் மற்றும் துரோகிகள் என்று குற்றம் சாட்டி டிஎபி மற்றும் இதர பக்கத்தான் ரக்யாட் தலைவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்”, என்று கிட்சியாங் வருத்தமுடன் கூறினார்.

ஏன் இனவாதம் மற்றும் சமய விரோதங்களை தூண்டிவிடுவதற்கு பெர்காசா மற்றும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கிட் சியாங் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற நடப்புக் கூட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய பேரரசர் அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதை கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

ibrahim aliஆனால், பெர்காசா அரசாங்கம் அமைத்துள்ள தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்தை தொடார்ந்து குறைகூறி வந்ததோடு அது இப்போது நாட்டின் இன உறவு பிரச்சனைகளைக் கையாள்வதற்கு தனது சொந்த தேசிய ஒற்றுமை கூட்டணியை அமைத்துள்ளது.

“தீவிரவாத பெர்காசாவும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளும் அவர்களுடைய சினமூட்டும், உணர்ச்சியற்ற அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் பேரரசருக்கு பகிரங்க சவாலையும் எதிர்ப்பையும் அளித்துள்ளனர்”, என்று கிட் சியாங் அவரது நேற்றைய அறிக்கையில் கூறியுள்ளார்.

“அவர்கள் ஒட்டுமொத்தமாக தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்தை நிராகரித்துள்ளதோடு அதற்கு மாற்றாக தேசிய ஒற்றுமை கூட்டணையை நிருவியுள்ளனர்”, என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி தலைவராக நியமனம்

நேற்று, பெர்காசா ஆதரவிலான தேசிய ஒற்றுமை கூட்டணி முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட்டை அதன் முதல் தலைவராக அறிவித்தது.