அம்பிகா: ஒபாமாவிடம் நஜிப் சொல்லாததை நாங்கள் சொன்னோம்!

 

Ambiga - obamaநேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடைபெற்ற ஒரு மணி நேர சந்திப்பில் மலேசிய சிவில் சமூக உறுப்பினர்கள் நாட்டின் உண்மையான நிலவரத்தை அவரிடம் கூறினர்.

அச்சந்திப்பில் கலந்து கொண்ட மனித உரிமை குழுவான ஹகாம் தலைவர் எஸ். அம்பிகா அந்த வரலாற்றுப்பூர்வமான சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை மலேசியாகினியுடன் பகிர்ந்து கொண்டார்.

“(எழுப்பப்பட்ட) பிரச்னைகளில் பிளவுகளை உருவாக்கும் முரண்பாடான அரசியல், சமய மற்றும் இனவாத தீவிரவாதம், பாகுபாடு காணுதல், அடக்குமுறை சட்டங்களின் வழி அரசாங்கம் அமல்படுத்தும் ஆதிக்க ஆட்சி, சுயேட்சை மற்றும் நேர்மையான தேர்தல்கள் மற்றும் சட்ட ஆளுமை போன்றவை அடங்கும்”, என்று அவர் கூறினார்.

எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீதான குற்றச்சாட்டுகள், எதிர்கட்சிகளுக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் போன்றவையும் விவரிக்கப்பட்டது.

மலேசிய அதிகாரத்தினர் எவ்வாறு ஊடகங்களை நசுக்குகின்றனர் என்பதும் ஒபாமாவிடம் தெரிவிக்கப்பட்டது என்று அம்பிகா கூறினார்.

“மலேசியா ஒரு மிதவாத இஸ்லாமிய நாடுமல்ல என்பதோடு அது ஜனநாயகம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்திற்கு உட்பட்ட ஜனநாயக நாடுமல்ல என்பதை நாங்கள் தெள்ளத் தெளிவாக கூறினோம்”, என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான அம்பிகா மேலும் கூறினார்.

 

 

TAGS: