மலேசியாகினி: “அன்புள்ள பிரதமரே, வாருங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம்”

 

Najib sues Mkiniமலேசியாகினி வாசகர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை பதிவு செய்ததற்காக அதன் மீது பிரதமர் நஜிப்பும் அம்னோவும் வழக்கு தொடர்ந்துள்ளன. அதற்கான நீதிமன்ற ஆணை இன்று மலேசியாகினியிடம் சார்வு செய்யப்பட்டது.

மலேசியாகினியை வெளியிடும் எம்கினி டோட் கோம் செண்டிரியான் பெர்ஹாட், ஆசிரியர் குழு தலைவர் ஸ்டீபன் கான், தலைமை ஆசிரியர் ஃபதி அரிஸ் ஒமார் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் சக வாதி அம்னோவின் செயல்முறை செயலாளர் அப்துல் ரவுப் யுசோ.

மே 14 ஆம் தேதி மலேசியாகினி வெளியிட்ட “நீங்கள் கூறுவது” என்ற தலைப்பில் நஜிப் மற்றும் திரங்கானு விவகாரங்கள் பற்றிய கட்டுரைகள் அவதூறானவை” என்று வாதிகள் கூறுகின்றனர்.

இவ்வழக்கு ஜூன் 18 இல் நீதிபதி எஸ்எம் கோமதியின் முன் முதல்கட்ட நிர்வாக விசாரணைக்கு வருகிறது.

வழக்கை தீவிரமாக எதிர்க்கும் எண்ணம்

கடந்த மாதம் உத்துசான் மலேசியா மலேசியகினி வாசகர்களை தாக்கி எழுதியிருந்த போதே இவ்வழக்கை எதிர்பார்த்தோம் என்று ஸ்டீபன் கான் கூறினார்.

மலேசியாகினி வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதில் அளிக்கும் உரிமையை மலேசியாகினி நஜிப்பிற்கு வழங்கிற்கு. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார் கான்.

Najib sues Mkini1 “அவரையும் அம்னோவையும் பற்றிய மலேசியாகினி வாசகர்களின் கருத்துகள் ஏன் தவறானவை என்று அவர் நினைக்கிறார் என்பதற்கு விளக்கம் அளிக்க அவர் வரவேற்கப்பட்டார்”, என்று ஸ்டீபன் கூறினார்.

பிரதமரும் அம்னோவும் அவர்களின் கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும். அதனை மலேசியாகினி வெளியிட்டிருக்கும். அதை விடுத்து ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தல் ஏன் என்றாரவர்.

நஜிப் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நிராகரித்து விட்டார். கடந்து வியாழக்கிழமை அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இந்த வழக்கை கடுமையாக எதிர்த்தும் போராடும் எண்ணம் கொண்டுள்ளோம்”, என்று ஸ்டீபன் உறுதியாகக் கூறினார்.

“அன்புள்ள பிரதமரே, நீதிமன்றத்தில் சந்திப்போம்!”

மலேசியாகினி பிரதமர் நஜிப்புக்கும் அம்னோவுக்கும் அவர்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளித்தோம் என்று கூறிய மலேசியாகினியின் தலைமை ஆசிரியர் ஃபதி, “இதன் காரணமாக கூறுவதற்கு எஞ்சியுள்ளது, ‘அன்புள்ள பிரதமரே, வாருங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம்'” என்பதுதான் என்றார்.