மகாதிர்: பெர்சே பேரணிக்குச் சென்றதற்காகக் கைது செய்ய வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள்

subபெர்சே 4 பேரணியில்  கலந்துகொண்டதற்காக  போலீசார்  தம்மைக்  கைது  செய்ய  விரும்பினால்  தாராளமாகக்  கைது  செய்யலாம்  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார்.

“அது  அவர்களின்  உரிமை. கைது  செய்வதாக  இருந்தால் செய்யுங்கள். இதில்   ஒத்துழைக்க   என்ன  இருக்கிறது”, என  மகாதிர்  சுபாங்  வீமான  நிலையத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

“பத்திரிகையில்  படித்தேன். நான்  போவேன்.  போலீஸ் உங்களை  விசாரணைக்கு  அழைத்தால் போகத்தான்  வேண்டும். மலேசியாவில்  அப்படித்தான்”, என்றாரவர்.

பேரணியில்  பேசியபோது,   அம்னோ  தொகுதித்  தலைவர்களுக்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கையூட்டு  கொடுத்தார்  என்று தாம்  குற்றஞ்சாட்டியது  உண்மைதான்  என்று  மகாதிர்  கூறினார்.

செக்  குடியரசு  சென்றுவிட்டுத்  திரும்பிய  மகாதிரை  வரவேற்க  சுமார்  100  ஆதரவாளர்கள்  இன்று  காலை 11.15க்கு  சுபாங்  விமான நிலையம்  வந்திருந்தனர்.