WSJ செய்திகள் பொய்யென்றால் எம்சிஎம்சி நடவடிக்கை எடுக்கும்

minis1எம்டிபி  மீது பொய்யான  செய்திகளை  வெளியிட்டதாக  தெரிய  வந்தால் மலேசிய  தொடர்பு, பல்லூடக  ஆணையம்(எம்சிஎம்சி)  வால் ஸ்திரிட்  ஜர்னல்மீது   நடவடிக்கை  எடுக்கும்.

“அச்செய்திகள்  தீய  நோக்கம்  கொண்டவை  என்பதால்  தேவையான  நடவடிக்கைகளை  எடுக்குமாறு  எம்சிஎம்சி  பணிக்கப்படும்”, என தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சைட்  கெருவாக் இன்று  புத்ரா  ஜெயாவில்  கூறினார்.

அத்துடன்   பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)  உறுப்பினர்களில்  எவரேனும்  வால் ஸ்திரிட்  ஜர்னலுக்குத்  தகவலைக்  கசிய  விட்டார்களா  என்பதையும் அதிகாரிகள் விசாரிக்க  வேண்டும்  என்றும்  அமைச்சர்  கூறினார்.

1எம்டிபி  பற்றி  நேற்று வெளியிட்டிருந்த  செய்திக்காக WSJமீது  நடவடிக்கை  எடுக்கப்படுமா  என்று  வினவியதற்கு  அவர்  இவ்வாறு  கூறினார்.

அந்த  அனைத்துலக நாளேடு,  யுஏஇ-இன்  இண்டர்நேசனல் பெட்ரோலியம்  இன்வெஸ்ட்மெண்ட்  நிறுவனத்துக்கு 1எம்டிபி-இடமிருந்து வரவேண்டிய யுஎஸ்$1.4 பில்லியன்  இன்னும் வந்து  சேரவில்லை  என்று  நேற்று  செய்தி  வெளியிட்டிருந்தது.