புத்ரா ஜெயா: ஹாங்காங் கிரெடிட் சுவிஸ் வங்கியில் பிரதமருக்குக் கணக்கு இல்லை

bankஹாங்காங்கில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்குகளை  அந்நாட்டுப்  போலீசார் புலனாய்வு  செய்வது  “அரசியல்  நோக்கம்கொண்ட”  போலீஸ்  புகார்களை  அடிப்படையாகக்  கொண்டு  மேற்கொள்ளப்படும்  நடவடிக்கை  என  புத்ரா  ஜெயா கூறியது.

முன்னாள்  பத்து  கவான்  அம்னோ  உதவித்  தலைவர்  கைருடின்  அபு  ஹாசான்  ஆகஸ்ட்  3-இல்,  ஹாங்காங்கில்  செய்த  போலீஸ்  புகாரைத்  தொடர்ந்து  அந்த  ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. கிரெடிட் சுவிஸ்  வங்கியில்   நான்கு  நிறுவனங்கள் ரிம1.125 பில்லியனைப்  போட்டு  வைத்திருப்பதாகவும்  அந்நிறுவனங்களில்  நஜிப்பும்  பங்குதாரர்  என்றும்  கைருடின்  கூறினார்.

அந்நிறுவனங்கள்  பினாங்கு  கோடீஸ்வரர்  ஜோ  லவ்சுக்கும்   அவரின்  குடும்பத்தாருக்கும்  சொந்தமானவையாம்.

மலேசிய  அரசாங்கப்  பேச்சாளர்  ஒருவர்  அக்கூற்றை  மறுத்தார். அது  “அடிப்படையற்றது, அரசியல்  நோக்கம்கொண்ட  பொய்மூட்டை”, என்றவர்  வருணித்ததாக  பைனான்சியல்  டைம்ஸ் கூறியது.

“பிரதமருக்கு  ஹாங்காங்கில்  கெரெடிட்  சுவிஸ்  வங்கியில்  அவருடைய  பெயரிலோ  மேலே  குறிப்பிடப்பட்டிருக்கும்  நிறுவனங்களின்  பெயரிலோ  வங்கிக் கணக்குகள்  கிடையாது”, என  அப்பேச்சாளர்  கூறினார்.