போலீசுக்குத் தெரிவிக்காவிட்டால் பேரணி சட்டவிரோதமாகிவிடும்

polisசெப்டம்பர்  16-இல்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும் பெர்ஹிம்புனான்  மாருவா மலாயு  சிகப்புச்  சட்டைப்  பேரணி  பற்றி  அதன்  ஏற்பாட்டாளர்கள்  போலீசுக்குத்  தகவல் தெரிவிக்க  வேண்டும்.  தெரிவிக்காவிட்டால்  அது சட்டவிரோத  பேரணியாகி  விடும்.

பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பேரணி  நடக்கும்  இடத்துக்குச்  சொந்தக்காரர்களிடமிருந்தும்  அனுமதி  பெற  வேண்டும்  என கோலாலும்பூர்  போலீஸ்  துணைத்  தலைவர்  லாவ்  ஹொங்  சூன்  கூறினார்.

“இதுவரை  தெரிவிக்கப்படவில்லை….. தெரிவிக்காவிட்டால்,  அனுமதி  பெறத்  தவறினால்,  சட்டங்கள்  மீறப்பட்டால்  நாங்கள்  நடவடிக்கை  எடுப்போம்”, என  லாவ்  இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  தெரிவித்தார்.