‘பனாமா பேப்பர்ஸ்’மீது உலக நாடுகளின் கவனம்

papersஉலகம் முழுவதும் அரசியல் பெரும்புள்ளிகள்,   பிரபலங்கள், பெரும்  பணக்காரர்கள்  பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்து எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுதான் ‘பனாமா பேப்பர்ஸ்’.

பனாமா  பேப்பர்ஸ்  அம்பலப்படுத்தியுள்ள  பிரபலங்களின்  பட்டியலில்  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின்  நண்பர்கள்,  பிரிட்டன்,  ஐஸ்லாந்து,  பாகிஸ்தான்  ஆகிய  நாட்டு  பிரதமர்களின்   உறவினர்கள், உக்ரேன்  அதிபர்  முதலானோரின்  பெயர்கள்  இடம்பெற்றுள்ளன. பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி யின்  பெயரும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்  போன்றோரும்  பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக  நாடுகளின்  கவனம்  இப்போது  இந்த  பனாமா  பேப்பர்ஸ்மீது  திரும்பியுள்ளது. தங்கள்  நாட்டைச்  சேர்ந்த  பெரும்புள்ளிகள்  வரிஏய்ப்பு  செய்யும்  நோக்கத்தில்  பனாமாவில்  பதுக்கி  வைத்திருக்கும்  பணம்  பற்றிய  செய்திகள் அதில்  இருக்கலாம்  என்பதால்  அந்த  ஆவணங்களை  அவை  தீவிரமாக  ஆராய்ந்து  வருகின்றன.