1எம்டிபி குறித்து ஆஸி வங்கி அதிகாரியிடம் விசாரணை

Aussieஆஸ்திரேலிய  நாடாளுமன்ற  விசாரணைக்  குழு அந்நாட்டு வங்கி  அதிகாரி  ஒருவரிடம்   அவருடைய  வங்கிக்கு  1எம்டிபி  ஊழலுடன்  தொடர்புண்டா   எனத்  துருவித்  துருவி  விசாரித்துள்ளது..

யுஎஸ்$1பில்லியனுக்குமேல்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  AmBank  வங்கிக்கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டது  பற்றி  அறிவாரா  என்று ANZ Bank துணைத்  தலைவர்  கிரேஹேம்  ஹோட்ஜசிடம்  வினவப்பட்டது.

ANZ வங்கி   AmBank-இல்  24 விழுக்காடு  பங்குரிமை வைத்துள்ளது.

ஹோட்ஜஸே  AmBank இயக்குனர்  வாரிய  உறுப்பினராக  நியமனம்  செய்யப்படவுள்ளார்.

ANZ வங்கி  சிறுபான்மை  பங்குகளை  வைத்திருப்பதால்  அதன்  அதிகாரம்  வரம்புக்கு  உள்பட்டதுதான்,  ஊழல்  விவகாரத்தில்  அதனால்  எதுவும்  செய்ய  இயலாது  என  அவர்  கூறியதாக  சிட்னி  மார்னிங்  ஹெரால்ட்  நாளேடு  தெரிவித்துள்ளது.

“அங்கு  நடப்பது  பற்றிப்  பேசுவதற்கு  வாரிய  இயக்குனர்களுக்கு    அனுமதி  இல்லை”, என்றாரவர்.

இதனிடையே, 1எம்டிபி  ஊழல்  தொடர்பில்  ANZ-உம்  ஆஸ்திரேலியாவின்  இன்னொரு  வங்கியான NAB-உம்   சிங்கப்பூர்  அதிகாரிகளால்  விசாரிக்கப்பட்டு  வருவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.