மிட்வேலி உணவகத்தில் கேஸ் வெடிப்பு: எண்மர் காயம்

mallமிட்வேலி  பேரங்காடியில்   உணவகம் ஒன்றில்  நிகழ்ந்த  எரிவாயு வெடிப்பில்  எண்மர்  காயமடைந்ததாக தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது.

அச்சம்பவம் காலை  மணி 9.45 அளவில் நிகழ்ந்ததாக  பந்தாய் தீயணைப்பு, மீட்புத்துறையின்  பேச்சாளர்  தெரிவித்தார்.

தொடக்கநிலை  ஆய்வுகள்  எரிவாயு  கசிவினால்  வெடிப்பு  நிகழ்ந்திருக்கலாம்  என்பதைக்  காண்பிக்கின்றன.

அச்சம்பவத்தில்  இருவருக்கு தீக்காயங்களும், மற்றவர்களுக்கு இலேசான காயங்களும் ஏற்பட்ட  அத்துறையின்  டிவிட்டர்  பக்கத்தில்  தெரிவிக்கப்பட்டிருந்தது..