ரபிஸி நாடாளுமன்ற எல்லைக்குள் கைது செய்யப்பட்டாரா? அவைத் தலைவர் ஆராய்கிறார்

muliaபிகேஆர்- பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லியை  நாடாளுமன்ற  நுழைவாயிலில்  கைது  செய்ததன்  மூலம்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்(ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்  நாடாளுமன்ற  நிலை  ஆணையை  மீறினாரா  என்பதை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாவால்  உறுதியாக  சொல்ல  இயலவில்லை.

ஏனென்றால்  ரபிஸி கைது  செய்யப்பட்ட  இடம், நாடாளுமன்ற  நுழைவாயிலுக்கு  வெளியில்  உள்ள  பகுதி,  நாடாளுமன்றக்  கட்டிடத்தைச்  சேர்ந்ததுதானா  என்பது  தெளிவாக  தெரியவில்லை  என்றாரவர்.

அதை அவர்  இப்போது  ஆராய்ந்து  வருகிறார்.

விரைவில் அதன்மீது  முடிவெடுப்பதாகவும்  பண்டிகார்  உறுதி  அளித்தார்.

போலீசார்  நாடாளுமன்ற  எல்லைக்குள்  நடவடிக்கை  எடுப்பதாக  இருந்தால்  அவைத்  தலைவருக்கு  முன்கூட்டியே  தகவல்  தெரிவிக்க  வேண்டும்  என்றாரவர்.

ஐஜிபி  நாடாளுமன்றத்தை  அவமதிக்கும்  வகையில்  நடந்து  கொண்டார்  என்று  கூறி  அவருக்கு  எதிராக   தீர்மானம்  ஒன்றைக்  கொண்டுவந்த  சுங்கை  பட்டாணி  பிகேஆர்  எம்பி   ஜொஹாரி  அப்துலுக்கு  அவைத்  தலைவர்  மேற்கண்டவாறு  பதிலளித்தார்.