ஓஎஸ்ஏ-இன்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார் ரபிஸி

sessபாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லிமீது  கோலாலும்பூர்  செஷன்ஸ் நீதிமன்றத்தில்  அதிகாரத்துவ  இரகசியச்  சட்ட(ஒஎஸ்ஏ)த்தின்கீழ்  இரண்டு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டன.

பிகேஆர்  உதவித்  தலைவரும்  தலைமைச்  செயலாளருமான  ரபிஸி  ஓஎஸ்ஏ-இன்கீழ்  இரகசியம்  என்று  வகைப்படுத்தப்பட்ட  ஆவணம்  ஒன்றை  வெளிப்படுத்தியதாகவும்  கைவசம்  வைத்திருந்ததாகவும்  குற்றம்  சாட்டப்பட்டது.

நாடாளுமன்ற  வளாகத்தில்  மார்ச்  24-இல்   அவர்  அந்த  ஆவணத்தை  வெளிப்படுத்தினார்  என்றும்  மார்ச்  28-இல்  அதே  இடத்தில்  அந்த  ஆவணத்தைக்  கைவசம்  வைத்திருந்தார்  என்றும்  கூறப்பட்டது..

ரபிஸி  குற்றச்சாட்டுகளை  மறுத்து  விசாரணை  கோரினார்.

செஷன்ஸ்  நீதிபதி  சுல்கர்னேன்  ஹசான்  சம்பந்தப்பட்ட  இரகசிய  ஆவணத்தை  ஏப்ரல்  14-இல்  நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்குமாறு  உத்தரவிட்டு  ஏப்ரல்  29-இல்  விசாரணை  தேதியை  அறிவிப்பதாகக்  கூறினார்.

பின்னர்,  நீதிபதி  ரிம3,000  ரொக்கம்  ஒரு  நபர் உத்தரவாதத்தில்  ரபிஸியைப்  பிணையில்  விடுவித்தார்.