சிந்தனைக்குழு: நஜிப் 1எம்டிபி-யை ஆட்டுவித்தாரா என்பதைக் கண்டறிய வேண்டும்

wanபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  திரைமறைவில்  1எம்டிபிமீது  ஆதிக்கம்  செலுத்தினாரா  என்பதை  அதிகாரிகள்  கண்டறிய  வேண்டும்  எனச்  சிந்தனைக்குழு  ஒன்று  கேட்டுக்கொண்டிருக்கிறது,

“ஆலோசனை  வாரியத்தின்  தலைவர்  என்ற  முறையில்  பிரதமர்  ஆதிக்கம்  செலுத்தினாரா  என்பதை  ஆராய  வேண்டும்.

“தவறினால்  நடந்துள்ள  விசாரணை  முழுமையானது  ஆகாது”, என ஜனநாயகம்  மற்றும்  பொருளாதார  விவகாரங்கள்  கழக (ஐடியஸ்)  செயல்முறை  அதிகாரி  சைபுல்  வான்  ஜான்  கூறினார்.

ஒரு  பிரதமரை அரசு-சார்ந்த  நிறுவனம்(ஜிஎல்சி)  ஒன்றின்  ஆலோசனை  வாரியத்  தலைவராக  நியமித்ததையும்  அவர்  குறை  கூறினார்.  அது  “மடத்தனமான  வேலை”  என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

1எம்டிபி  மீதான  பொதுக் கணக்குக்  குழு  அறிக்கை  குறித்துக்  கருத்துரைத்தபோது  வான்  சைபுல்  அவ்வாறு  கூறினார்.

நாட்டில்  செல்வாக்குமிக்க  மனிதரின்  சொல்லை  ஜிஎல்சி  வாரியத்தில்  உள்ளவர்களாலும்  நிர்வாகத்தில்   உள்ளவர்களாலும்  மீற  முடியுமா.

“பேரரசரே  அவருடைய  ஆலோசனைப்  பின்பற்ற  வேண்டிய  கட்டாயத்தில்  இருக்க்கிறார். இயக்குனர்கள்  யாரும்  அவரின்  ஆலோசனைக்கு  மறுப்பு  கூற  இயலுமா?.

“முன்னாள் (1எம்டிபி)  சிஇஓ  ஆலோசனை  வாரிய  இயக்குனர்களைப்  புறக்கணித்தே   வந்திருக்கிறார்  என்றால்  அதற்குக்  காரணம்  இதுதான்  என்று  சிலர்  சொல்லிக்  கொண்டிருக்கிறார்கள்.  அவருக்கு  சக்திவாய்ந்த  ஒருவரிடமிருந்து  உத்தரவு  வந்து  கொண்டிருந்ததாம்”, என்றாரவர்.