தமிழா! நீ உணரும்போது, உயிருடனாவது இருப்பாயா???


தமிழா! நீ உணரும்போது, உயிருடனாவது இருப்பாயா???

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

nathiyadra tamilan

மேகதாது அணை, பாலாற்று தடுப்பணை மத்தியரசு தலையீடாது….

உச்சநீதி மன்றம் வலியுறுத்தினாலும் கூட,

காவிரி நதிநீர் தர மத்தியரசு உத்திரவிடாது….

சந்தான கவுடா, காவிரி நீர் தர முடியாது என

மதுரையில் வந்து கூற முடியும்….

ஈழத்தில் தமிழ் பெயரில் இருக்கும் ஊர் பெயர்களை மாற்றி விட்டு

சீறி நாயக-மஹிந்த ராஜபக்சேவால் திருப்பதி வர முடியும்…..

இந்திய வரலாற்றிலே, பாகிஸ்தான் கூட

இதுவரை 10 இந்திய மீனவர்களை கூட கொன்றது கிடையாது…

ஆனால் இலங்கை இதுவரை 600க்கும் மேற்ப்பட்ட

தமிழ் மீனவனை சுட்டு கொன்றுள்ளது…

20-கூலி தமிழ் தொழிலாளிகளை ஆந்திர சந்திர பாபு நாயுடுவால்

குருவி சுடுவது போல சுட்டு கொல்ல முடியும்…

சபரிமலைக்கு சாமி கும்பிட செல்லும் தமிழனை

டீக்கடை மலையாளி நாயரால்

வெந்நீர் ஊற்றி படுகொலை செய்ய முடியும்…

ஆம் தமிழா!! நீ மட்டுமே, இந்தியாவில் நாதியற்றவன்…

இதை உரக்க சொன்ன தமிழ் தேசிய போராளிகள்

உனக்கு வேண்டாதவனாக தெரிந்தான்…

பிரிவினைவாதியாக தோன்றினான்…

உனக்கு சாதி காரனாக தோன்றினான்…

ஏன் உனக்கு மதஎதிரியாக கூட தெரிந்தான்…

நாதியற்ற அடிமை தமிழா!!!

நீ உண்மைகளை உணரும்போது…

அந்நாள் நீ உயிருடனாவது இருப்பாயா???

((குறிப்பு: இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்கள் / தமிழ் மொழியே அழிந்து விடும்.. இது யுனெஸ்கோ நிறுவனம் 5-ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட செய்தி)) –

-Jees Suganthini Marthandam.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • Dhilip 2 wrote on 21 அக்டோபர், 2016, 5:33

    நாதியற்ற தமிழா என்று ஏன் ஒரு நாயின் படம் போட்டு அந்த நாயை அவமான படுத்துவானேன் ? முடிந்தால் எழுதுபவர் படத்தை போடுங்கள் .. இல்லை என்றால் தமிழர்களின் படங்களை போடுங்கள். அதை விடுத்து ஏன் ஒரு நாயை அவமான படுத்துகிறீர்கள் ? நாய்க்கு தமிழ் தெரியுமா ? இல்லை நாய்தான் தமிழ் படிக்க வேண்டும் என்று கேட்ட்தா ? பிறகு ஏன் இப்படி ? நாயை வைத்து தமிழை கேவல படுத்தாதீர்கள் …..

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: