மலேசியா எல்லாம் போலே


மலேசியா எல்லாம் போலே

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

சங்க கால புதிய கவிதை
இந்த கால் மரபு எதுவும் வேகல !

modernartஅரசியல் அது நம்ப தலைவன்கள்
நமக்கே சுத்தன அம்மி
தேய்ந்து நாமே இடிச்ச
உலக்கையும் உரலும்  உடைய

ஆட்டி விட்ட பம்பரம் கால குத்த
கயிறு கழுத்தை இறுக்க
தமிழன் மீது ஓட்டைபோட்ட
வடுக சீரியல்

சூட்ட கிளப்ப சூத்திரன்
சாமிகள் ஏசி கேற்க
வெளியில் சூடம் சுத்த
ஆசாமிகள் ஆட்டம்

அடுத்த PR 14 கு
கும்பல் சேர்க்குது
சேர சோழன் பாண்டியன்
சோத்துக்கு விற்றான்

கலந்து போன இந்தியன்
தமிழன போட்டான்
கொடி கட்டி காய்ந்த
காயில் அரசியல் வீரியம் இழந்தான்

வாங்கடா என்றால்
என்ன என்னான்னு
கேக்கிறான்

தலைவன் எல்லாத்தியும்
கௌண்டிங்கல போடுறான்
கேட்டால் தமிழேன்பா
செப்புறான் !!!

ஹிப்பி ஹீ ஹீ என்றான்
சப்பி ஹிப் ஹாப் ஆடுறான்
துட்டு  குடுத்தா அபாங் போடுறான்
கேட்டுபுட்டா கொதிப்புடறான்

கபாலி சொன்னா மகிழ்ச்சி
அவன்தான் தமிழன் என்று வேற
பிதா மகன்போல பிணத்தை தேடுறான்

மிச்ச எழும்ப காட்டி பால் ஊத்றான்
கேட்டா அவரு  எழுப்புதான்
என்று யாருக்கோ பால் போவுது

தப்பு தப்பா பேசி ஏய்க்கிறான்
டைம்ல  ஒட்டு போடுங்க என்பவன்
எல்லாம் அரசியல் பேச்சன்
கொடி தூக்கும் போக்கனாக்கள்

கூட்டமா வைபி வைபீர்
தந்தா ஊர கூட்டி  கொடுத்து
குருதி வாங்குறான்
மலேஷியா எல்லாம் போலே
அப்பா ளாகி அப்பா செய்ஞ்சதுதான்

-பொன்.ரங்கன்

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • Dhilip 2 wrote on 2 நவம்பர், 2016, 16:47

  “சூத்திரன்” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் பொன் ரங்கன். இது தாழ்த்தப்பட்ட இனதவறை குறிக்க பயன் படுத்தும் சொல். அதுவும் இப்பொழுது தமிழ் நாட்டிலே இதற்க்கு ஆதரவு இல்லை. ஆனால் பொன் ரங்கன் ‘தமிழன காப்பாத்துறேன் பேர்விழி’ என்று ஜாதிகளை உள்ளே நுழைக்க பார்க்கிறார் . முதலில் தனித்தமிழன் இப்பொழுது பாமரனை சூத்திரன் என்று குத்தி காட்டுகிறார். சொந்த இனத்தை கேவல படுத்த அடுத்தவன் தேவையில்லை ……

 • Pon Rangan wrote on 8 நவம்பர், 2016, 21:22

  சூத்திரன் என்பது தமிழனை குறிக்கும் என்பது எந்தத் தமிழரின்
  இதிகாசத்தில் உள்ளது? சூட்டை கிளப்ப சூத்திரன் சாமிகள் என்றால் என்ன….? நான் ஏசியில் இருந்து ஏய்க்கும் தன்னை கடவுளாக
  நம்பும் பிராமணரை சூத்திரர் என்று பிராமணர் ஆசாமிகள் சொல்வதை கேட்டதுண்டு.

 • Dhilip 2 wrote on 9 நவம்பர், 2016, 3:40

  “சூட்ட கிளப்ப சூத்திரன்
  சாமிகள் ஏசி கேற்க
  வெளியில் சூடம் சுத்த
  ஆசாமிகள் ஆட்டம்” என்று தங்கள் தான் எழுதி உள்ளேர்கள் பொன் ரங்கன் அவர்களே. சொல்லி விட்டு சொல்ல வில்லை என்பதுதான் இப்பொழுது புதுமையா ?

 • சின்னபையன் wrote on 9 நவம்பர், 2016, 10:56

  (சொல்லி விட்டு சொல்ல வில்லை என்பதுதான் இப்பொழுது புதுமையா ?) இதே மாதிரி நீ எத்தனை தடவை சொல்லி இருப்பாய்? கணக்கில் அடங்காதவை , நீ நியாயம் பேசுற .. எல்லாம் கலி காலம்

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: