நஸ்ரி: கிளந்தானில் பாஸ் தோல்வி கண்டது, அதனால்தான் ஹாடி ஹுடுட் சட்டம் கொண்டு வர நினைக்கிறார்

nazriகிளந்தானை   முன்மாதிரி    இஸ்லாமிய   மாநிலமாக்கும்  முயற்சியில்   பாஸ்   தோற்றுப்  போனதால்தான்  அங்கு   கடும்  தண்டனைகளை  விதிக்க   புதிய   சட்டங்களைக்   கொண்டுவர   விரும்புகிறது    என   அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்   நஸ்ரி   அப்துல்  அஜீஸ்   கூறினார்.

பாஸ்   அதன்  முயற்சியில்   வெற்றி   பெற்றிருந்தால்   கடும்   தண்டனைகளைக்  கொடுக்கும்  ஹுடுட்   சட்டம்   அதற்குத்   தேவைப்படாது.

“பாஸால்    கிளந்தானை   இஸ்லாமிய   மாநிலமாக   மாற்ற   முடியவில்லை.  அதனால்தான்    (குற்றங்களுக்கு)  கடும்  தண்டனைகளை  வழங்க   நினைக்கிறது.

“பாஸ்  வெற்றி  பெற்றிருந்தால்,  அம்மாநிலத்தில்   அனைவரும்  (ரமலான்  மாதத்தில்)  நோன்பு  நோற்பார்கள்.  அதைக்  கட்டாயப்படுத்த   வேண்டிய  அவசியம்   இருந்திருக்காது. ஆக,  கிளந்தானில்    அவர்கள்  தோற்றுப்  போனார்கள்”,  என்றாரவர்.