சிவப்புச் சட்டைக்குப் பதிலாக வெறும் துண்டுடன் தண்ணீர் தடைக்கு எதிராக ஜமால் போராட்டம்

jamalசுங்கை    புசார்    அம்னோ   தொகுதித்     தலைவர்    ஜமால்   முகம்மட் யூனூஸ்,   வழக்கமாக   அணியும்    சிவப்புச்    சட்டைக்குப்   பதிலாக    கட்டிய துண்டோடு சிலாங்கூரில்   நீர்  விநியோகத்     தடைக்கு     எதிராக   போராட்டத்தில்     குதித்தார்.

இன்று    காலை   ஜாமால்   15   ஆதரவாளர்களுடன்    ஷா   ஆலம்   மந்திரி பெசார்   அலுவலகம்   சென்று   வீட்டில்   குளிப்பதற்குத்   தண்ணீர்   இல்லை   என்பதால்    அங்கு   குளிக்க    வந்ததாகக்  கூறினார்.

அம்பாங்கில்  உள்ள   தன்  வீட்டில்    நான்கு   நாள்களாக   தண்ணீர்    வரவில்லை   என்றாரவர்.

“இது  சிவப்புச்   சட்டை   அல்ல.  வெள்ளைத்  துண்டு. நான்  ஆர்ப்பாட்டம்   செய்வதற்காக   இங்கு   வரவில்லை.  மந்திரி  புசார்   அலுவலகத்தில்   குளிக்கத்தான்    வந்தேன்.

“அவரது  அலுவலகத்தில்   குளிக்க  முடியாவிட்டால்,  கீழ்மாடியிலாவது   குளிக்க   விடுங்கள்”,  என்றார்.

மந்திரி    புசார்   அஸ்மின்  அலியும்   மாநில    அரசும்   தண்ணீர்   பிரச்னைக்குத்   தீர்வு   காணாமல்  அதை     அரசியலாக்குவதாக  ஜமால்    குற்றம்    சாட்டினார்.