தமிழ்மொழி காக்க கிள்ளானுக்கு திரண்டு வாரீர் தமிழர்களே!

contentwriting_1வரும் சனிக்கிழமை 31 / 12 / 2016 மாலை மணி 5 க்கு கிளாங் செட்டி திடலில் ஒன்று கூடுவோம். அடுத்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் இரு மொழி அல்ல மூன்று மொழித்திடடத்தை அமுலாக்க தமிழ்த்தரவு இல்லாத தரகர்கள் ஒப்பிவிட்டு ஓலமிடுவதை ஒடுக்குவோம்.

நாட்டில் 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றையும் ௦௦௦ ஆண்டுகள் தமிழர்களின் போராட்டத்தையும் அடகு வைக்க சில உளவு அறிவிலிகள் அயித்தாமாய்விட்ட்னர்.

இன்னும் 50 ஆண்டுகளில் தமிழர்களின் அடையாளமிலா நாடாக்க கல்வி மேம்பாடு என்ற பேரில் தமிழர்களுக்கும் , தமிழுக்கும் வேதியல் தர தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் தமிழ்மொழிக்கு ஆபத்து வந்துள்ளது. தமிழ்ப்பள்ளிகளை அழிப்பதற்க்கான மாற்றான் படலம் தொடங்கிவிட்டது.தமிழுக்கும் தமிழர்களுக்கும் பாடைக்கட்ட தமிழர் போல வேஷமிடும் கபோதிகள் கூட்டம் சுற்றித்திரிகிறது. வேற்று மொழியில் படித்தால் புத்தாக்க புத்தி வந்து வானத்தில் முடடையிடாலம் என்கிறார்கள்.

நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் இருக்க… வசதிக்கு வந்த 50 தமிழ்ப்பள்ளிகளில் 12 பேரிடம் ஆலோசனை கேட்டு கல்வி அமைச்சுக்கு அதிபுத்திசாலித்தனமா DLP என்ற இருமொழி திட்டத்தை அமுலாக்க ஆலோசனை வழங்கிய PTST பிரதமர் துறை எனும் தமிழ்ப்பள்ளி திட்ட வரைவு அதிகாரிக்கு என்ன தரவு தெரியும்.

அரசும் கல்வி அமைச்சும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தீர்மானிக்கட்டும் என்று அறிவிக்க இந்த அளவியல் ஆதங்கங்கள் குட்டி ஆய்வை வைத்து தீர்மானித்த விந்தை விசித்திரம்தான்.

தமிழ்ப்பள்ளிக்கே தம பிள்ளைகளை அனுப்பாதவர்கெல்லாம் தமிழ்ப்பள்ளி கட்டட காட்சிக்கு மட்டும் தங்கள் துறைசார்பில்லா நிபுணத்துவத்தை ஒப்பிடலாம். அது கல்லும் மண்ணும் கம்பி சிக்கல்.? யார்வேண்டுமானாலும் குதறலாம்.

தமிழ் மொழியும் தமிழ்ப்பள்ளியும் தமிழர்களின் அரசு உரிமை. தமிழரின் தொன்மம் தமிழ்மொழியின் பவ்வியம் தெரியாமல் விளையாடக்கூடாது. நவீன இலக்கிய இலக்கை தொடும் தமிழ்மீது மேய்வது மன்னிக்க முடியா குற்றமாகும். ஒரு இனத்தின் பிகப்பெரிய சொத்து அதன் மொழி. மலாய்மொழிக்கு நம்மினம் சிறந்த மரியாதை வைத்து நாட்டு வளப்பதுடன் கல்வி கற்கிறோம்.அது நமது கடமை.

தானும் தன் பிள்ளையும் மகா மாமேதைகள் ஆக வேண்டுமானால் விருப்பப்படி செய்யுங்கள் ஆனால் தமிழினத்துக்கு துரோகம் வேண்டாம் என்கிறோம். தமிழ்ப்பள்ளியில் இணைத்துக்கொண்டு எங்கள் கலாச்சாரம் மட்டும் வேண்டும் என்பது செயற்கை விதையில் , அதில் தமிழ் உரமில்லை உணரவில்லை உறவுமில்லை. காலம் தன் தமிழ்ககடமையை செய்யும்.

தமிழ்ப்பள்ளிகளை பொறுத்தவரை புத்தாக்கம்,தொழில்த்திறன், ஆங்கிலம் ,மலாய் என்று நான்குப்பாடங்கள் வேற்று மொழியில் உள்ளது. இதனுடன் அறிவியலும் கணிதமும் சேர்த்தால் மொத்தம் 6 பாடங்கள் வேற்றுமொழியாவதால் தமிழ் மாணவர்களின் தமிழ் உணர்வும் தமிழ்ப்பேசும் தரமும் பாதிக்கும்.

இதை மலாய் பள்ளிகளில் படித்த தமிழ் மாணவர்களை பார்த்துள்ளோம். பாடங்களை தமிழில் உணர்ந்து சிந்தையில் பதிக்கும் நிலை மாறி மனனம் நிலையோடு மறதிக்கு வழிவிடும் என்ற சாதார தரவுக்கூட இந்த தரவியல் ஆய்வாளர்களுக்கு இல்லாமல் போனது வெறுமைதான்.

உளவியல் ரீதியிலும் மரபணு ரீதியிலும் ஆன்மீக தவத்திலும் தமிழுக்கு ஈடாக எந்த கலவியும் தமிழர்களுக்கு ஒவ்வாமைதான். ஊர் மெச்சிக்க ஆங்கிலம் பேசினாலும் உணர்வில் உதித்து மொழியில் ஒலியாகும் ஓம் எனும் பிரளய தவத்திற்கும் தமிழனுக்கும் தொடர்புண்டு.

சில ஆங்கில தமிழர்கள் உலக கல்வி அறிவார்ந்தவர்கள் போல தமிழ் கலப்பு கலாச்சாரம் வேண்டும் என்று உணர்ச்சியில் ஆமோதிப்பது தெரியும் .உணர்வில் நாளானபின் வெளுக்கும். கடைசியில் பால் கொடுங்க என்று ஆ என்று முடிப்பதும் தமிழனுக்கு தமிழில்தான் வரும்.

மறவாமல் 31 /12 மாலை 5 மணிக்கு தமிழுக்கு தமிழனாக வந்து விடுங்கள் ,

நன்றி வாழ்க தமிழ். வணக்கம்,

தமிழ்ப்பள்ளி DLP எதிர்ப்பு குழுமம்
ஊடகப்பொறுப்பாளர்

பொன் .ரங்கன். 
0166944223