ஜோ லோ திரும்பி வந்து 1எம்டிபி குறித்து விளக்கமளிக்க வேண்டும்: குவான் எங் வலியுறுத்து

joபினாங்கில்   பிறந்தவரான   லோ   தெக்   லோ   அல்லது   ஜோ  லோ,   நாடு   திரும்பி    1எம்டிபியில்  அவரது   பங்கு   என்னவென்பதை   விளக்கிட    வேண்டும்   என்று   பினாங்கு   முதலமைச்சர்    லிம்  குவான்   எங்    வலியுறுத்தினார்.

1எம்டிபி   விவகாரத்தால்   மலேசியாவின்  பெயர்   கெட்டுப்   போயுள்ளது.  அதிகாரிகள்   ஜோ   லோ-வின்   கடப்பிதழை   இரத்துச்  செய்ய    வேண்டும்   என்றவர்    கேட்டுக்கொண்டார்.

“1எம்டிபி  குறித்து   விளக்கமளிக்க     அவர்    நாட்டுக்குக்    கொண்டுவரப்பட    வேண்டும்.

“நஜிப்மீதுதான்   நடவடிக்கை    எடுக்க    முடியவில்லை,  ஜோ   லோ மீதாவது   நடவடிக்கை    எடுப்போம்”,  என   டிஏபி  தலைமைச்    செயலாளருமான   லிம்   கூறினார்.

கடந்த   ஆண்டு   அமெரிக்க   நீதித்   துறை       பணச்சலவை    நடவடிக்கைகள்   தொடர்பில்   தொடுத்த    வழக்கில்   ஜோ   லோ,   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்கின்   மாற்றான்   மகன்   ரேஸா   அசிஸ்    ஆகியோரும்   எதிர்வாதிகளின்  பட்டியலில்   இடம்பெற்றுள்ளனர்.

பினாங்கு   ஆயர்   ஈத்தாமில்    1எம்டிபிக்குச்   சொந்தமான   234   ஏக்கர்   நிலத்தை   மாநில    அரசு   தொடர்ந்து   முடக்கி   வைத்திருக்கும்     என்றும்   லிம்   தெரிவித்தார்.

“1எம்டிபி   ஊழல்மீது   முழு  விசாரணை   முடிந்து    அறிக்கை  வெளிவரும்   வரையில்”   அந்நிலம்மீது    எவ்வித    பரிவர்த்தனையும்     நடப்பதை   மாநில    அரசு   தடுக்கும்   என்றாரவர்.